சிவகார்த்திகேயன்பின் “பிரின்ஸ்” படத்தின் அப்டேட் கொடுத்த நாயகி!

 சிவகார்த்திகேயன்பின் “பிரின்ஸ்” படத்தின் அப்டேட் கொடுத்த நாயகி!

சிவகார்த்திகேயன் நடிப்பில் தெலுங்கு இயக்குனர் அனுதீப் இயக்கத்தில் உருவாகி வரும் படம் தான் “பிரின்ஸ்”.

தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் இப்படம் உருவாகி வருகிறது.

உக்ரைன் நடிகை மரியா, சத்யராஜ், பிரேம்ஜி ஆகியோர் முக்கியமான பாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.

இந்நிலையில், இப்படத்தின் நாயகி மரியா, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பிரின்ஸ் படத்தின் படப்பிடிப்பு நிறைவுபெற்றதாகவும், சுமார் 4 மாதங்கள் நடைபெற்ற படப்பிடிப்பு முடிந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

படக்குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துகள் எனவும் தெரிவித்துள்ளார். இப்படத்தைத் தொடர்ந்து மண்டேலா பட இயக்குனருடன் “மாவீரன்” படத்திற்காக கைகோர்க்கிறார் சிவகார்த்திகேயன்.

சிவகார்த்திகேயனின் அடுத்தடுத்த அப்டேட்டுகளால் மிகுந்த உற்சாகத்தில் இருக்கின்றனர் அவரது ரசிகர்கள்.

 

Related post