மாருதி நகர் போலீஸ் ஸ்டேஷன் விமர்சனம்

 மாருதி நகர் போலீஸ் ஸ்டேஷன் விமர்சனம்

ஆரவ், வரலக்ஷ்மி சரத் குமார், சந்தோஷ் பிரதாப், அமித் பார்கவ், சுப்ரமணிய சிவா நடிப்பில், தயாள் பத்மநாபன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் “மாருதி நகர் போலீஸ் ஸ்டேஷன்”.

எதை பேசுகிறது இப்படம்?

ஒரு குற்றத்தை தட்டிக்கேட்க செல்லும் ஒரு சாமானியன் குற்றவாளிகளின் வலையில் சிக்கிக்கொள்ள, நண்பனுக்காக பழிவாங்க நினைக்கும் நண்பர்கள் பற்றிய கதை இது.

கதைப்படி,

Varalakshmi Sarathkumar, Santhosh Prathap in Maruthi Nagar Police Station Movie Images HD

வேலை முடித்து வீடு திரும்பும் போது, சிறுமியை ஒரு கும்பல் கடத்தி செல்கிறது. அதை பார்க்கும் மஹத், மாருதி நகர் காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக இருக்கும் அமித்திடம் தகவல் தெரிவிக்கிறார்.

அப்போது சம்பவ இடத்திற்கு விரைந்து செல்லும் மஹத் மற்றும் அமித். சுப்ரமணிய சிவா தலைமையிலான கும்பலை பார்க்கின்றனர். ஆனால், இன்ஸ்பெக்டராக அமித், சுப்ரமணிய சிவாவுக்கு நண்பர் என்பதால் மஹத்தை கொலை செய்கின்றனர்.

இதை அறிந்த மஹத்தின் நண்பர்களான, வரலக்ஷ்மி, சந்தோஷ் பிரதாப், யாசர் மற்றும் விவேக் ராஜ கோபால்.

இன்ஸ்பெக்டர் அமித் மற்றும் சுப்ரமணிய சிவாவை பழி வாங்க திட்டம் தீட்டுகின்றனர்.

அந்த திட்டம் சரியாக நடந்ததா? ஆரவ் எதற்காக இந்த வழக்கை விசாரிக்க வந்தார்? ஆரவ் யார்? என்ற பல திருப்பங்களை கொண்டது தான் படத்தின் இரண்டாம் பாதி.

சப்-இன்ஸ்பெக்டராக களமிறங்கி அதகளம் செய்ய முயற்சித்துள்ளார் வரலக்ஷ்மி. மப்டி ட்ரெஸ்ஸில் அழகாக இருந்தாலும், போலீஸ் காஸ்டியூமில் அவரின் ஒல்லியான தேகம் அந்த கதாபாத்திரத்திற்கு எடுபடவில்லை.

சந்தோஷ் பிரதாப்புக்கு இப்படத்தில் பெரிதாக வசனமும் இல்லை வேலையும் இல்லை. ஆனால், கொடுத்த பாத்திரத்திற்கு சிறப்பு சேர்த்துள்ளனர்.

மிடுக்கான போலீசாக வந்து மிரட்டியுள்ளார் ஆரவ். கம்பீரமான தோற்றம், உயர் அதிகாரிக்கேற்ற உடல் மொழி என இரண்டாம் பாதி முழுவதையும் தன் வசம் வைத்துக் கொள்கிறார்.

சின்ன ஒன் லைன் வைத்து சுவாரஸ்யமாக திரைக்கதை அமைத்துள்ளார் இயக்குனர் தயாள் பத்மநாபன். மேலும், அதிகப்படியான கதாபாத்திரங்கள் இருப்பதால் கொலை குற்றவாளி யார் என்ற சந்தேகத்தை பலர் மேல் வைத்திருக்கலாமோ என்ற எண்ணம். ஆனால், எடுக்க நினைத்த கதையை திசை மாறாமல் எடுத்துச்சென்றது படத்தின் மீதான கவனத்தை குறைக்கவில்லை.

மானிகாந்த் கத்ரியின் இசை, படத்தின் த்ரில்லர் கதைக்கு தேவையான சுவாரஸ்யத்தையும், பரபரப்பையும் தக்க வைத்து படத்திற்கு பலமாக அமைந்துள்ளது.

மாருதி நகர் போலீஸ் ஸ்டேஷன் – ஓடிடியில் ஒட்டாமல் பார்க்கலாம் –  (3/5);

Related post