ஜெயிலர் படத்தால் முன்கூட்டியே ரிலீஸ் ஆகும் மாவீரன்!

 ஜெயிலர் படத்தால் முன்கூட்டியே ரிலீஸ் ஆகும் மாவீரன்!

மண்டேலா பட இயக்குனர் அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க உருவாகியிருக்கும் திரைப்படம் தான் “மாவீரன்”.

படத்தின் படப்பிடிப்பு அனைத்தும் முடிவடைந்து, வரும் ஆகஸ்ட் மாதம் 11 ஆம் தேதி திரைக்கு வரும் சில தினங்களுக்கு முன் அறிவிப்பு வெளியானது.

இந்நிலையில், நேற்றைய தினம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் உருவாகியுள்ள ஜெயிலர் திரைப்படம் வரும் ஆகஸ்ட் மாதம் 10 ஆம் தேதி வெளியாகும் என அறிவிப்பு வெளியானது.

இதனால், அதிர்ச்சியடைந்த மாவீரன் படக்குழு படத்தின் ரிலீஸ் தேதியை மாற்ற திட்டம் வகுத்து வருகிறது.

அதன்படி, ஜூலை மாதத்திலேயே மாவீரன் படத்தினை ரிலீஸ் செய்ய தற்போது ப்ளான் செய்யப்பட்டு வருகிறதாம்.

 

Related post