Mayanadhi – திரைப்படம் விமர்சனம்

 Mayanadhi – திரைப்படம் விமர்சனம்

மாயநதி – மாயநதி என்ற பெயரில் ஏற்கனவே மலையாளத்தில் சமீபத்தில் வெளிவந்து ஹிட்டடித்தது. ஆனால் அந்த படத்திற்கும் இதற்கும் எந்த சம்மந்தமும் இல்லை. படத்தின் கதை தனது சிறுவதியிலேயே தாயை இழந்துவிடும் நாயகி தனது தந்தையின் அரவணைப்பில் வளர்கிறார்,அவரது தந்தையும் மகளுக்காக வேறு கல்யாணம் செய்து கொள்ளவில்லை.தனது பள்ளி பருவ இறுதியில் இருக்கும் நாயகிக்கும் அதே பகுதியில் ஆட்டோ ஓட்டும் நாயகனுக்கும் காதல் மலர்கிறது,இது தந்தைக்கு பிடிக்க வில்லை இதனால் அவரது படிப்புக்கும் தடங்கல் வருகிறது. இதிலிருந்து அவர் மீண்டாரா? காதலனை கரம்பிடித்தாரா? என்பது மீதி கதை.

நாயகனாக அபி சரவணன் ஆட்டோ ஓட்டுநராக தன்னுடைய எதார்த்த நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.படத்தின் நாயகி வெண்பா பள்ளி மாணவியாக தந்தையின் மகளாக காதலியாக மூன்று பரிணாமங்களை அழகாக வெளிப்படுத்துகிறார். ஆடுகளம் நரேன் இந்த படத்தில் தந்தை வேடத்தில் நடித்திருக்கிறார். அப்பு குட்டி மற்றும் கார்த்திக் ராஜா நல்ல தேர்வு. யுவனின் சகோதரி பாடகி பவதாரிணி இந்த படத்திற்கு இசை அமைத்திருக்கிறார். பாடல்கள் கேட்கும் ரகமாக உள்ளது.படத்தின் ஒளிப்பதிவும் எடிட்டிங்கும் பலம்.இயக்குனர் அசோக் தியாகராஜன் படத்தின் கதையில் சிறு மாற்றங்களை செய்திருந்தால் படத்தை இன்னும் ரசிக்கும் படியாக எடுத்திருக்கலாம்.

மாயநதி – ஒரு முறை பார்க்கலாம்.

Related post