” பேய காணோம்” படப்பிடிப்பில் இருந்து நள்ளிரவில் ஆறு பேர் கொண்ட கும்பலுடன் ஓடிய நடிகை மீரா மிதுன் படக்குழுவினர் அதிர்ச்சி.

 ” பேய காணோம்” படப்பிடிப்பில் இருந்து நள்ளிரவில் ஆறு பேர் கொண்ட கும்பலுடன் ஓடிய நடிகை மீரா மிதுன் படக்குழுவினர் அதிர்ச்சி.
Digiqole ad

குளோபல் எண்டர் டெயின்மெண்ட் பட நிறுவனம் சார்பில் தேனி பாரத் R. சுருளிவேல் தயாரிக்கும் படத்திற்கு ” பேய காணோம் ” என்று வித்தியாசமான தலைப்பை வைத்துள்ளார். இந்த படத்தில் மீரா மிதுன் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார். மற்றும் கௌசிக், சந்தியா ராமச்சந்திரன், கோதண்டம், ஜாக்குவார் தங்கம், ஜெயா டிவி ஜேக்கப், வி.கே.சுந்தர், செல்வகுமார், ஜெய் சங்கர், துரை ஆனந்த்,ரவி, விக்கி, ஆகியோர் நடித்துள்ளனர். சிறப்புத் தோற்றத்தில் இயக்குனர் தருண்கோபி நடித்துள்ளார்.

இசை – மிஸ்டர் கோளாறு
பின்னணி இசை – காதர் மஸ்தான்
ஒளிப்பதிவு – ராஜ்.O.S, கௌபாஸு, பிரகாஷ்
பாடல்கள் – நந்துதாசன் நாகலிங்கம், ராம் பாரதி, ஜே.கே, திருச்சி கல்பனா,
எடிட்டிங் – A.K.நாகராஜ்
நடனம் – பாலகுமார், ரேவதி
ஸ்டண்ட் – இடிமின்னல் இளங்கோ
தயாரிப்பு மேற்பார்வை – உசிலை சிவகுமார்.
மக்கள் தொடர்பு – மணவை புவன்
கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் – செல்வ அன்பரசன். Dft

படம் பற்றி இயக்குனர் செல்வ அன்பரசன் தெரிவித்ததாவது…

வாழ்க்கையில் பணத்தை காணோம், குழந்தையை காணோம், பொருளை காணோம்,நண்பனை காணோம், இன்னும் எதை எதையோ காணோம் என்று தேடியிருப்போம். முதன் முதலாக ஒரு பேயை தேடுகிறார்கள்.
பேயை எதற்காக தேடுகிறார்கள் என்பது தான் படத்தின் திரைக்கதை. இது முழுக்க முழுக்க நகைச்சுவையை மையமாக வைத்து எடுக்கப் பட்ட பேய் படம் இது.

80 சதவீதம் படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில் படத்தின் இதர 20 சதவீதம் படப்பிடிப்பு எடுக்க வேண்டி இருந்தது. நாயகி மீரா ஜெயிலில் இருந்து வந்தவுடன் சென்னையில் படப்பிடிப்பை துவங்கினோம். இறுதிக்கட்ட படப்பிடிப்பை கொடைக்கானலில் கடந்த வாரம் நடத்த திட்டமிட்டு படக்குழுவுடன் கொடைக்கானல் சென்று படப்பிடிப்பை நடத்தினோம் மீரா மிதுன் மற்றும் இதர கலைஞகர்கள் நடிக்க படப்பிடிப்பு முழுவீச்சில் நடைபெறுக்கொண்டிருந்தது படப்பிடிப்பு முழுவதும் முடிய இரண்டு நாட்களே இருந்த நிலையில் திடீரென நடிகை மீரா மிதுன் நள்ளிரவில் 6 பேர் கொண்ட குழுவுடன் தனது உடைமைகைளை எடுத்துக்கொண்டு அங்கிருந்து ஓடிவிட்டார். மறுநாள் காலையில் இயக்குனரிடம் மேனேஜர் விஷயத்தை சொல்ல மொத்த படக்குழுவும் அதிர்ச்சியில் மூழ்கினோம். பேயை தேட போன நாங்கள் கதாநாயகியை தேட வேண்டியதாகி விட்டது.

எனது தயாரிப்பாளர் என்னிடம் வந்து தற்போது என்ன செய்ய போகிறீர்கள் என்று கேட்டவுடன்.. இத்தனை தொழில் நுட்ப கலைஞர்களின் உழைப்பை அவர் மதிக்காமல் சென்றுவிட்டார். அவர் இல்லை என்றாலும் பரவாயில்லை நான் காட்சிகளை வேறுவிதமாக எடுத்துக் கொள்கிறேன் என்று சொல்லிவிட்டு, நம்மளைவிட மீராவை கூட்டிப்போன அந்த ஆறுபேரை நினைத்தால் தான் பாவமாக இருக்கிறது என்று நகைச்சுவையாக எடுத்துக் கொண்டு இரண்டு நாட்கள் படப்பிடிப்பை முடித்து இரவு 11.30 மணியளவில் பூசணிக்காய் உடைத்துவிட்டு படக்குழுவினருடன் சென்னை வந்துவிட்டேன்.

இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது விரைவில் திரையரங்கில் அனைவரும் பேயை தேடலாம்.

Digiqole ad
Spread the love

Related post