மெஹந்தி சர்க்கஸ் நாயகனோடு கைகோர்க்கும் சீனு ராமசாமி!

மெஹந்தி சர்க்கஸ் திரைப்படத்தில் ஹீரோவாக நடித்த ரங்கராஜ், இயக்குனர் சீனு ராமசாமி இயக்கத்தில் நடிக்க இருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது. சென்ற 2019 ஆம் வருடம் வெளியான மெஹந்தி சர்க்கஸ் திரைப்படத்தின் மூலம் மக்களிடையே பிரபலமானார் மாதம்பட்டி ரங்கராஜ்.
இத்திரைப்படத்தை சரவணன் ராஜேந்திரன் இயக்க இளைஞர்களுடைய நல்ல வரவேற்பு கிடைத்தது. ஷான் ரோல்டன் இசையில் வெளியான பாடல்கள் அனைத்தும் மிகப்பெரும் அளவில் ஹிட் அடித்தது.
பிறகு எந்த திரைப்படத்திலும் நடிக்காமல் இருந்த ரங்கராஜ் தற்போது சீனு ராமசாமி உடன் இணைய இருப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது . காதல் கதையை அடிப்படையாகக் கொண்டு தயாராகும் இப்படத்தை மாதம்பட்டி சினிமாஸ் நிறுவனம் தயாரிக்கிறது குறிப்பிடத்தக்கது.