மெமரீஸ் திரைவிமர்சனம்

வெற்றி, பார்வதி அருண் மற்றும் பலர் நடிப்பில் உருவாகி வெளியாகியுள்ள திரைப்படம் “மெமரீஸ்”. இப்படத்தை ஷியாம், பிரவீன் என இருவர் இனைந்து இயக்கியுள்ளனர்.
எதை பேசுகிறது இப்படம்?
ஒரு மனிதனின் நினைவுகளை இன்னொரு மனிதனுக்கு மாற்றி வைத்தால் என்ன மாதிரியான பிரச்சனைகள் வரும் என்பதை இப்படம் பேசுகிறது.
கதைப்படி,
நாயகன் வெற்றி தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கதையை சொல்ல ஆரம்பிக்கிறார்.
அக்கதையில் வரும் கதாபாத்திரமான வெங்கி, தனது நினைவுகளை இழந்து தான் யார் என்பதை கண்டுபிடிக்கும் விதத்தில் ஓடுகிறார். அவரை சுற்றியுள்ளவர்கள் வெங்கி இரண்டு கொலை செய்துவிட்டதாகவும், சுய நினைவை இழந்துவிட்டதாகவும் தெரிவிக்கின்றனர். பின்னர், ஓரு சில நினைவுகளை மீட்டெடுக்கும் வெங்கி, அவர் கொலை செய்யவில்லை என்றும். அவரை சுற்றி சூழிச்சி நடக்கிறது என்பதையும் உணர்கிறார்.
வெங்கி தான் உண்மையான குற்றவாளியா? அவரை எதற்காக கொலை குற்றத்தில் சிக்க வைக்கின்றனர்? என்ற கேள்விகளுக்கான பதில் இரண்டாம் பாதி.
வெற்றியின் நடிப்பு முந்தைய படங்களை விட இப்படத்தில் தேர்ச்சி பெற்றுள்ளது. எமோஷன் காட்சிகளில் அவர் கூடுதல் முயற்சி எடுத்து நடிக்க வேண்டும்.
பார்வதி அருணுக்கு பெரிதாக ஸ்க்ரீன் ஸ்பேஸ் இல்லை என்றாலும் கொடுக்கப்பட்ட பாத்திரத்தை மிகவும் யதார்த்தமாக நடித்துள்ளார்.
இரு இயக்குனர்கள் என்பதால் கூடுதலாக சிந்தித்து, கதைக்குள் கதை அந்த கதைக்குள் மற்றொரு கதை என கிட்டத்தட்ட 4 கதைகளை கொண்ட ஒரு படமாக அமைந்துள்ளது மெமரீஸ் படம்.
“ஏ” சென்டர் ஆடியன்ஸ்களுக்கு மட்டுமே புரியும் படியான திரைக்கதையமைத்து படத்தின் தரத்தை மாற்றி அமைத்துள்ளார்கள் இந்த இரட்டை இயக்குனர்கள்.
படத்தின் இசை மற்றும் ஒளிப்பதிவு ஓகே.