மைக்கேல் விமர்சனம்

 மைக்கேல் விமர்சனம்

சந்தீப் கிஷன், விஜய் சேதுபதி, கவுதம் மேனன், வரலக்ஷ்மி, திவ்யன்ஷா கௌஷிக் மற்றும் பலர் நடிப்பில், ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கத்தில் உருவாகியுள்ள படம் “மைக்கேல்”. லோகேஷ் கனகராஜ் இப்படத்தை வழங்கியுள்ளார்.

கதைப்படி,

தந்தையை தேடி 13 வயதில் மும்பைக்கு செல்கிறார் கதாநாயகன் மைக்கேல். ஒருவழியாக தந்தையை தேடி கண்டுபிடிக்கிறார். மறுபுறம் மும்பையின் டானாக கவுதம் மேனன் வலம் வருகிறார். அப்போது கையில் கத்தியுடன் ஒருவர் கவுதம் மேனனை கொலை செய்ய முயற்சிக்கிறார்.

கொலை செய்ய வரும் அந்த நபரிடம் இருந்து கவுதம் மேனனை, மைக்கேல் காப்பாற்றுகிறார். இதனால் கவுதமுடன் நெருக்கமாகும் மைக்கேல், அவர் கட்டுப்பாட்டில் இருக்கும் ஏரியா ஒன்றையும் பார்த்துக்கொள்கிறார்.

தன்னை கொலை செய்ய திட்டமிட்டது யார் என்பதை கண்டுபிடித்து அவர்களை தீர்த்துக் கட்ட கவுதம் முடிவெடுக்கிறார். அதன்படி ஒரு தகவல் கிடைக்க, கொலை செய்ய திட்டமிட்ட நபரின் மகளை கண்டுபிடிக்கிறார்.

அந்த நபரையும் அவரின் மகளையும் கொலை செய்வதற்காக மைக்கேலை கவுதம் அனுப்பி வைக்கிறார். சென்ற இடத்தில் அந்த பெண்ணுடன் காதல் மலர, இருவரும் நெருக்கமாகிறார்கள்.

அந்த பெண்ணையும், அவரின் தந்தையையும்மைக்கேல் கொள்ளாமல் விட்டுவிடுகிறார். இதனால் கோபமடையும் கவுதம், மைக்கேலையும் தீர்த்துக் கட்ட முடிவெடுக்கிறார். இறுதியில் இவர்களிடம் இருந்து மைக்கேல் தப்பித்தாரா? இருவருக்கும் என்ன ஆனது? காதலில் வெற்றி பெற்றாரா? என்பதே படத்தின் மீதிக்கதை.

மைக்கேலாக வரும் சந்தீப் கிஷன் ஆக்‌ஷன் காட்சிகளில் அதகள படுத்தினாலும் ரொமான்ஸில் பெரிதாக ஸ்கொர் செய்யவில்லை.

கதாநாயகியாக வரும் திவ்யன்ஷா கௌசிக், எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.

வில்லனாக வரும் கவுதம் மேனன் தனி கவனம் பெறுகிறார். மாஸ் காட்சிகளில் டானாகவே மாறியுள்ளார்.

சிறப்பு தோற்றத்தில் வரும் விஜய் சேதுபதி கதைக்கு பலமாக அமைந்துள்ளார். வரலக்ஷ்மி சரத்குமார் தனக்கு கொடுக்கப்பட்ட பணியை சிறப்பாக செய்துள்ளார். மேலும் அய்யப்பா பி. ஷர்மா, அனுஷ்யா பரத்வாஜ் மற்றும் படத்தில் வரும் பலரும் அவர்களின் பணியை சரியாக செய்துள்ளனர்.

ஆக்‌ஷன் கலந்த திரில்லராக உருவாக்க முயற்சித்திருக்கிறார் இயக்குனர் ரஞ்சித் ஜெயக்கொடி. தமிழ் சினிமாவில் தோன்றிய பழைய பாணி கதையை எடுத்துக் கொண்டு திரைக்கதையை மாற்றி அமைத்துள்ளார்.

பழைய பாணி என்றால், கே.ஜி.ஏஃப் கதையை மையமாக கொண்டும் “நாயகன்” படத்தின் ரெபரென்சிலும் படத்தை பிரம்மாண்டமாக காட்ட முயற்சித்து தவறியுள்ளார்.

90 காலக்கட்டத்தை ஒளிப்பதிவின் மூலம் கண்முன் நிறுத்துகிறார் ஒளிப்பதிவாளர் கிரண் கெளசிக்.

சாம் சி.எஸ் மட்டுமே இப்படத்தை தூக்கி நிறுத்தியுள்ளார்.

மைக்கேல் – பல படத்தின் ரீ-சைக்கிள்.

Spread the love

Related post

You cannot copy content of this page