சினிமாவுக்கு முழுக்கு.. மாமன்னன் தான் கடைசி – உதயநிதி அதிரடி!

 சினிமாவுக்கு முழுக்கு.. மாமன்னன் தான் கடைசி – உதயநிதி அதிரடி!

சேப்பாக்கம் தொகுதியின் எம் எல் ஏ-வுமான நடிகருமான உதயநிதி ஸ்டாலின் இன்று இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சராக காலை பதவியேற்றுக் கொண்டார்.

தற்போது அமைச்சர் பதவியை ஏற்றுள்ள உதயநிதி ஸ்டாலின் தனக்கு இப்படி ஒரு பொறுப்பை கொடுத்த முதல்வருக்கு நன்றி என்றும், இதை ஒரு பதவியாக கருதாமல் பொறுப்பாக உணர்ந்து மக்களுக்காக பாடுபடுவேன் என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும் தான் அமைச்சராகி விட்டதால் இனிமேல் சினிமாவில் நடிக்க மாட்டேன். மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள மாமன்னன் படம் தான் நான் நடித்த கடைசி படம் என்றும், கமல்ஹாசன் சார் தயாரிப்பில் உருவாகும் படத்தில் நடிப்பதாக நான் அறிவித்திருந்தேன், அப்படத்தில் நான் நடிக்கவில்லை என்றும் அதிரடியாக தெரிவித்துள்ளார்.

முழுக்க முழுக்க மக்கள் பணிகள் ஈடுபடபோவதாக உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

 

Related post