மின்மினி விமர்சனம் – 3.5/5
இயக்கம்: ஹலிதா ஷமீம்
நடிகர்கள்: பிரவீன் கிஷோர், கௌரவ் காளை, எஸ்தர் அனில்
ஒளிப்பதிவு: மனோஜ் பரமஹம்சா
இசை: கதீஜா ரஹ்மான்
எடிட்டர்: ரேமண்ட் டெரிக் க்ராஸ்டா
தயாரிப்பாளர்: மனோஜ் பரமஹம்சா ஐஎஸ்சி, ஆர்.முரளி கிருஷ்ணன்
கதைப்படி,
ஊட்டியில் ஒரு தனியார் பள்ளியில் கதை தொடங்குகிறது. அந்த பள்ளியில் குறும்புக்கார மாணவராக படித்து வருபவர் தான் பாரி முகிலன். இவர் கால்பந்தாட்ட வீரரும் கூட. அதே பள்ளியில் புதிதாக வந்து சேர்பவர் சபரி கார்த்திகேயன். இவர் ஓவியர் மற்றும் செஸ் சேம்பியன்.
தனித்தனித் திறமை இருவரிடமும் இருந்தாலும் இந்த இரு மாணவர்களும் ஒருவருக்கொருவர் அவ்வப்போது பகைத்துக் கொண்டே இருந்து வருகின்றனர்.
இந்நிலையில், பள்ளி பேருந்தில் இவர்கள் பயணிக்கும் போது பேருந்து விபத்துக்குள்ளாகிறது. அந்த விபத்தில் சபரியை காப்பாற்றி கீழே குதிக்கும் போது பின் தலையில் அடிபடுகிறதுபாரி முகிலனுக்கு.
கோமா நிலைக்குச் செல்லும் பாரியின் உடல் உறுப்புகள் கதையின் நாயகியாக வரும் பிரவீணாவிற்கு பொறுத்துப்படுகிறது.
தனது உயிரைக் காப்பாற்றி பாரி இறந்ததை எண்ணி எண்ணி தினம் தினம் வருத்தப்பட்டுக் கொண்டிருக்கிறார் சபரி.
பாரியின் கனவை நிறைவேற்ற துடிக்கிறார் பிரவீணா. வருடங்கள் கடந்து இருவரும் சேர்ந்து இமயமலைக்கு பைக் ட்ரைவ் செய்கிறார்கள்.
அதன்பிறகு என்ன நடக்கிறது என்பதே படத்தின் மீதிக் கதை.
கதையில் நடித்த மூவரும் கதைக்கேற்ற நாயகர்களாக ஜொலித்திருந்தார்கள். இளம் வயதில் இருந்த கதாபாத்திரத்தின் கேரக்டர்களை 7 வருடங்கள் காத்திருந்து அவர்களையே மீண்டும் நடிக்க வைத்து படமாக்கியிருக்கிறார் இயக்குனர்.
மிகப்பெரும் ரிஸ்க் எடுத்து இக்கதையை படமாக்கி அதில் வெற்றியும் கண்டிருக்கிறார். ஒரு புத்தகத்தை வாசிப்பது போன்ற ஒரு அனுபவத்தை இப்படத்தின் மூலம் கொடுத்து அனைவரையும் அசர வைத்திருக்கிறார் இயக்குனர் ஹலிதா.
முதல் பாதியில் ஆங்காங்கே சற்று கதைக்கள் தொய்வை ஏற்படுத்திக் கொண்டு பயணித்தாலும், இரண்டாம் பாதியில் இருவரும் பயணத்தில் சந்திக்கும் மனிதர்கள், வாழ்க்கையின் ஓட்டம் என பல தரப்பட்ட எண்ணங்களை படம் பார்க்கும் ரசிகர்களிடத்தில் கொண்டு சேர்த்து விட்டது.
எந்த விதமான போதை, ஆபாசம், சண்டைக் காட்சி என எதுவும் இல்லாத ஒரு அழகிய கவிதையாக இப்படத்தை இயக்கியிருக்கிறார் இயக்குனர்.
படத்திற்கு மிகப்பெரும் பலமாக படத்தின் இசையமைப்பாளரும் ஏ ஆர் ரகுமானின் மகளுமான கதீஜா ரஹ்மான் இருக்கிறார். ஒவ்வொரு இடத்திலும் நன்றாகவே ஸ்கோர் செய்திருக்கிறார்.
மனோஜ் பரமஹம்சாவின் ஒளிப்பதிவு நன்றாகவே கைகொடுத்திருக்கிறது.
மின்மினி – நட்பு புத்தகம்.