Mirugaa – திரைப்படம் விமர்சனம்

 Mirugaa – திரைப்படம் விமர்சனம்

மிருகா :

பணக்கார விதவை பெண்களை நல்லவன் போல் நடித்து அவர்களை ஏமாற்றி திருமணம் செய்துகொண்டு அவர்களின் சொத்துக்களை அனுபவிப்பது, தன் மீது சந்தேகம் வந்ததும் அவர்களை தடயம் இல்லாமல் கொன்றுவிட்டு வேறு மாநிலம் தப்பிச்சென்று விடுவது தான் அர்விந்தின் (ஸ்ரீகாந்த் ) வழக்கம். அப்படி ஒருமுறை கோவாவில் தன் மனைவி, மாமியார், மகன்,மகள், மற்றும் அதனை நேரில் பார்த்த சாட்சியையும் கொள்வதை பக்கத்து வீட்டு பெண் தன்னுடைய மொபைல் ஃபோனில் படம் பிடித்து அர்விந்தை மிரட்டுகிறார். அவளுடைய மிரட்டலுக்கு அஞ்சி அவளது திட்டப்படி, அவளுடைய அக்கா ராய் லட்சுமியை திருமணம் செய்துகொண்டு அவளுடைய தொழிற்சாலைக்கு நிர்வாக இயக்குனராக பதவி ஏற்கிறார் ஸ்ரீகாந்த். தங்கையின் விருப்பப்படி அக்காவையும், அவர் குழந்தை மற்றும் இன்னொரு தங்கையையும் கொன்று சொத்துக்களை இருவரும் பகிர்ந்து கொண்டார்களா? இல்லை அவள் சதி செய்து ஸ்ரீகாந்த் தை சிறைக்கு அனுப்பினா ரா? என்பது தான் இந்த மிருகா படத்தின் மையக்கதை.
 
 
ஸ்ரீகாந்த்: முதல் காட்சயிலேயே தன் குடும்பத்தையே கொன்று ஒட்டுமொத்த பார்வையாளர்களின் வெறுப்பை சம்பாதிக்கும் எதிர்மறையான கேரக்டரில் முதல் முறையாக நடித்திருக்கிறார்.
பதட்டமடையும் காட்சிகளில் தடுமாற்றத்தையும் கொலை செய்யும் போது முழு வில்லதனத்தையும் சர்வ சாதாரணமாக வெளிப்படுத்தி தன் நடிப்பின் முதிர்ச்சியை உணர வைக்கிறார்.
ராய் லட்சுமி: ஸ்ரீகாந்த்துக்கு பொருத்தமான ஜோடியாகவும் காதல், ரொமான்ஸ் மற்றும் தாய்மை உணர்வையும் அளவாக வெளிப்படுத்தி நிறைவை தருகிறார். க்ளைமாக்ஸில் புலியுடனும் மிருகனுடனும் போராடும் தருணங்கள் படம் என்பதையே மறந்து ரசிக்க வைத்து விடுகிறார்.
கிராஃபிக்ஸ் புலி நிஜப்புலியின் உணர்வை தருவது நிஜமே. க்ளைமாக்ஸில் புலியின் ஆளுமையை அதிகம். அதனை உருவாக்கிய குழுவினருக்கு பார்வையாளர்கள் சார்பாக பாராட்டுகள்.
ஸ்ரீகாந்த் செய்யும் கொலைகளுக்கு ஆழமான மனதை தொடும் காரணம் இல்லாததும், ராய் லட்சுமியை அவர் ஈசியாக ஏமாற்றுவது நாமும் இது போல யாரையாவது ஏமாற்றி நிஜ வாழ்க்கையில் செட்டில் ஆகிவிடலாம் என்ற எண்ணத்தை ஏற்படுத்துவது திரைகதையின் பலவீனத்தை உணர்த்துகிறது.
இப்படத்தில் ஜெயித்தே தீரவேண்டும் என்ற நோக்கத்தில் இயக்குனர் j. பார்த்திபன் எடுத்திருக்கும் புது முயற்சிக்கு ரசிகர்கள் நிச்சயம் வரவேற்பு தருவார்கள் என்று நம்புவோம்.
 
மிருகா : மெருகேற்றியிருக்கலாம்.

Related post