இனி செட்’க்குள் செல்போன் கிடையாது.. “வாரிசு” படக்குழு அதிரடி!

 இனி செட்’க்குள் செல்போன் கிடையாது.. “வாரிசு” படக்குழு அதிரடி!

வம்சி இயக்கத்தில் தளபதி விஜய் வாரிசு படத்தில் நடித்து வருவது அனைவரும் அறிந்த ஒன்று தான். இப்படத்தில் ராஷ்மிகா, பிரகாஷ்ராஜ், சரத்குமார் என பல நட்சத்திரங்கள் இப்படத்தில் நடித்து வருகின்றனர்.

இந்நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு காட்சி ஒன்று இணையத்தில் வெளியாகி பெரும் வைரலானது. இதனால் வாரிசு படக்குழு முழுவதும் அதிர்ச்சி ஆனது.

இதனால், படக்குழுவினர் யாருக்கும் படப்பிடிப்பு தளத்தில் செல்போன் கொண்டு வர அனுமதி கிடையாமுடிவெடுத்துள்ளது.

இது, படப்பிடிப்பு முடியும்வரை இது தொடரும் எனவும் கூறியுள்ளது படக்குழு. படம் வெளிவரும் வரை படத்தின் புகைப்படம் முதற்கொண்டு எதுவும் வெளியே செல்லக்கூடாது என்று தயாரிப்பு நிறுவனம் கடுமையாக கூறியுள்ளதாம்.

 

Related post