இந்தியை ஏற்க மாட்டோம்.ஆனால், இந்தி படங்கள் இயக்க துடிப்போம் – விளாசிய இயக்குனர் மோகன் ஜி!

 இந்தியை ஏற்க மாட்டோம்.ஆனால், இந்தி படங்கள் இயக்க துடிப்போம் – விளாசிய இயக்குனர் மோகன் ஜி!

பழைய வண்ணாரப்பேட்டை, திரெளபதி,ருத்ரதாண்டவம், போன்ற படங்களை இயக்கியவர் தான் மோகன் ஜி. திரெளபதி, ருத்ரதாண்டவம் போன்ற படங்கள் அரசியல்வாதிகள் மத்தியில் ஒரு சில சலசலப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், தற்போது நட்டி, கெளதம் வாசுதேவ் மேனனை வைத்து பகாசூரன் என்ற படத்தை இயக்கி வருகிறார்.

இயக்குனர் மோகன் ஜி தனது ட்விட்டர் பக்கத்தில், “இந்தி ஏற்க மாட்டோம். ஆனால் இந்தி படங்கள் இயக்க துடிப்போம், இந்தி படிக்க புடிக்காது ஆனால் இந்தி நடிகர்கள், நடிகைகளை தமிழில் நடிக்க வைப்போம், இந்தி பேச புடிக்காது ஆனால் தமிழ் படங்களை இந்தியில் மொழி பெயர்த்து லாபம் அடைவோம்.. தமிழின் பெயரை சொல்லி ஏழை மக்களை ஏமாற்றுவதை நிறுத்துங்கள்..

இப்படி பேசும் எந்த சினிமா பிரபலமும் தங்கள் பிள்ளைகளை தமிழ் மொழி வழி பாடத்தில் படிக்க வைப்பதில்லை… அப்படி படிக்க வைப்பவர்கள் இதை பேசட்டும்.. ஆதரவு தரலாம்..” என்று கூறியுள்ளார். ட்விட்டரில் இயக்குனரின் இந்த பதிவிற்கு பல கமெண்ட்கள் வந்த வண்ணம் இருக்கின்றன.

Related post