Mookoothi Amman திரைப்படம் விமர்சனம்

 Mookoothi Amman திரைப்படம் விமர்சனம்

மூக்குத்தி அம்மன் : rj பாலாஜியின் இயக்கத்தில் நயன்தாரா முதல் முறையாக அம்மன் வேடம் ஏற்று நடித்து வெளிவந்திருக்கும் நகைச்சுவையான குடும்ப படம் தான் இந்த மூக்குத்தி அம்மன். படத்தின் நாயகனாக பாலாஜி நாகர்கோவில் பகுதியில் தன் குடும்பத்துடன் அம்மா ஊர்வசி தாத்தா மௌலி மற்றும் 3 தங்கைகளுடன் வசித்து வருகிறார். இவர்களின் குலதெய்வம் மூக்குத்தி அம்மன் கோவிலில் ஒரு நாள் சென்று தங்குகிறார்கள், தங்கும் இடத்தில அவர்கள் முன்  அம்மன் தோன்றி சில வரங்களை தருகிறது. தனக்கு சில காரியங்களை செய்ய வேண்டும் என்று பாலாஜியிடம் கட்டளையும் இடுகிறது. அப்படி அம்மன் அவர்களிடத்தில் என்ன உதவி கேட்டது ? அதை அவர்கள் நிறைவேற்றினார்களா இல்லையா ? என்பது மீதி கதை.

படத்தின் நாயகன் பாலாஜி என்றாலும் படத்தில் அதிகமாக ஸ்கோர் செய்வது லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா தான், பெயருக்கேற்றார் போல் எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் கனகச்சிதமாக பொருந்தி போகிறார் நம்ம நயன். அவருக்கு பின் அதிகமாக ஸ்கோர் செய்வது பாலாஜியின் அம்மாவாக வரும் ஊர்வசி அவர்கள் நடிப்பில் பிச்சி உதறுகிறார், பெரிய நடிகர்களுக்கு சவால் விடும் நடிப்பு. நாயகன் பாலாஜி கதைக்கேற்ற முகமாக பொருந்தி போகிறார். தங்கைகளாக வருபவர்களும் கச்சிதமாக நடித்துள்ளனர். பெரிய நடிகர் மௌலியை இன்னும் கொஞ்சம் பயன்படுத்தி இருக்கலாம். படத்தின் இசை மற்றும் ஒளிப்பதிவு படத்திற்கு தூணாக உள்ளது. படத்தின் முதல் பாதி கலகலப்பாக நகர்த்தி செல்லும் மற்றோரு இயக்குனர் சரவணன் இரண்டாம் பாதியில் சற்று சீரியசாக தான் சொல்ல வந்த கருத்தை கச்சிதமாக சொல்லி விட்டு செல்கிறார். வில்லன் பகவதி பாபா அருமை.

மூக்குத்தி அம்மன் : மிளிர்கிறது

Related post