மூத்தகுடி விமர்சனம்
இயக்கம்: ரவி பார்கவன்
நடிகர்கள்: தருண் கோபி, பிரகாஷ் சந்திரா, அன்விஷா, கே ஆர் விஜயா, ஆர் சுந்தர்ராஜன், ராஜ்கபூர்.
ஒளிப்பதிவு: கந்தா ரவிச்சந்திரன்
இசை : ஜே ஆர் முருகானந்தம்
கதைப்படி,
1970களில் கே ஆர் விஜயா தனது குடும்பத்தாருடன் கோவிலுக்குச் செல்கிறார். வழியில் உறவினர்கள் சாராயம் குடிக்கச் செல்கிறார்கள். அப்போது தகராறு ஏற்பட, விபத்தில் பலர் உயிர் விடுகின்றனர்.
அதனைத் தொடர்ந்து மூத்தகுடி குடும்பத்தைச் சேர்ந்த கே ஆர் விஜயா, தனது ஊருக்குள் யாரும் குடிக்கவும் கூடாது, சாராயத்தை விற்கவும் கூடாது என ஆணையிடுகிறார்.
பல வருடங்களாக இது நடைமுறை நடைமுறையாக தொடர்கிறது. மூத்தக்குடி கிராமத்திற்குள் சாராய தொழிற்சாலையை திறந்தே தீருவேன் என்று கங்கனம் கட்டி திரிகிறார் வில்லனாக வரும் ராஜ்கபூர்.
கே ஆர் விஜயாவின் பேரன்களாக வருகின்றனர் தருண் கோபி, பிரகாஷ் சந்திரா. தங்களது முறைப்பெண்ணாக வரும் அன்விஷாவை திருமணம் செய்து கொள்வதில் மனக்கசப்பு ஏற்பட தடம் மாறிச் செல்கிறார் தருண் கோபி.
அதன்பிறகு மூத்தகுடி கிராமம் என்னவானது என்பதே படத்தின் மீதிக் கதை.
கே ஆர் விஜயா தனது அனுபவ நடிப்பைக் கொடுத்திருக்கிறார். பேசாமலேயே தன் கண்பார்வையிலேயே மிரட்ட வைத்திருக்கிறார்.
தருண் கோபி இன்னும் அதிகமாகவே பயிற்சி எடுத்திருக்க வேண்டும். ஊரார் மற்றும் குடும்பத்தினரிடையே பேசும் காட்சிகள் கடுப்பைக் கொடுத்துவிட்டது.
பிரகாஷ் சந்திரா தனக்குக் கொடுக்கப்பட்டதை அளவோடு செய்திருக்கிறார்.
அன்விஷா காட்சிகளுக்கு அமைதியாகவும் அழகாகவும் வந்து தனது நடிப்பை நிறைவாகவே கொடுத்திருக்கிறார்.
ஒளிப்பதிவு மற்றும் பின்னணி இசை ஆறுதல்.
கதையின் நோக்கம் ஆழமாகவும் கருத்தாகவும் இருக்கிறது. திரைக்கதையை இன்னும் சற்றும் உயிரோட்டம் கொண்டு கொடுத்திருந்தால் மூத்தகுடி முக்கியமான படைப்பாக சேர்ந்திருக்கலாம்…
மூத்தகுடி – கருத்து.. – 2.5/5