பாலிவுட்டில் 2023ன் அதிகம் எதிர்பார்க்கப் படும் பட்டியலில் முதல் இடத்தை பிடித்த படம் இது தான்;

 பாலிவுட்டில் 2023ன் அதிகம் எதிர்பார்க்கப் படும் பட்டியலில் முதல் இடத்தை பிடித்த படம் இது தான்;

கடந்த 2022ம் ஆண்டு ஹிந்தி திரையுலகிற்கு ஏதோ சாபம் கிடைத்து விட்டது போல் இருந்தது. காரணம் ஆண்டு முழுக்க 1 படம் கூட ஹிட் அடிக்காத நிலையில் தான் ஹிந்தி சினிமா தத்தளித்து வந்தது.

அதில் வெளியான பல படங்கள், ஹிந்து மதத்தை பிறப்பும் படங்களாகவே இருந்தது. மேலும், காவி நிறத்தையோ, மற்ற மதத்தையோ தூக்கி பேசும் நடிகர்களின் படமோ “BOYCOTT” படங்களாக வெளியானது. காரணம் ஒன்றிய அரசின் அரசியல் என்று வெளிப்படையாகவே தெரியும்.

இதெல்லாம் ஒரு புறம் இருக்க, “BOYCOTT” பட்டியலில் இடம் பிடித்த முதல் படம் ஷாருக் கானின் “பதான்”. 5 ஆண்டுகளாக படங்கள் நடிக்காமல் இருந்த ஷாருக் இந்த ஆண்டு மட்டும் 3 படங்களை ரிலீஸ் செய்யவுள்ளார்.

அந்தவகையில் இரு தினங்களுக்கு முன் வெளியான “பதான்” திரைப்படம் பல தடங்களை கடந்து தனக்கென தனி தடத்தையே உருவாக்கி சாதனை படைத்துள்ளது. ஆம், படம் வெளியான இரண்டே நாளில் 200+ ரூபாய் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. மேலும், திங்கட்கிழமைக்குள் 500 ரூபாய் வசூலை தாண்டுமென எதிர்பார்க்கப்படுகிறது.

அது மட்டுமின்றி, இந்த ஆண்டு அதிகம் எதிர்பார்க்கும் படங்களின் பட்டியலில் அட்லீ இயக்கத்தில் உருவாகிவரும் “ஜவான்” திரைப்படம் முதல் இடத்தை பிடித்துள்ளது. இதற்கு காரணமும் “பதான்” படத்தின் வெற்றி என்றே சொல்லலாம்.

மேலும், சாலமன் கான் நடிப்பில் உருவாகியுள்ள “டைகர் – 3” படம் இரண்டாம் இடத்தையும், ரன்பிர் கபூர் நடித்துள்ள “ANIMAL” திரைப்படம் மூன்றாம் இடத்தையும் கருத்து கணிப்பில் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த 2022ம் ஆண்டை போல் இல்லாமல், சென்ற ஆண்டு ஹிந்தி திரையுலகம் எதிர்கொண்ட நஷ்டத்தை லாபமாக மாற்றும் ஆண்டாக 2023 இருக்கும் என ஹிந்தி திரையுலகும் ரசிகர்களும் எதிர்பார்க்கிறார்கள்.

 

Related post