ஜூன் 23, 24ல் படையெடுக்கும் திரைப்படங்கள்.. என்னென்ன படங்கள் தெரியுமா.?

 ஜூன் 23, 24ல் படையெடுக்கும் திரைப்படங்கள்.. என்னென்ன படங்கள் தெரியுமா.?

கொரோனா 2வது அலைக்குப் பிறகு மக்களின் பொருளாதார வாழ்க்கையும் பெரிதாக பாதிக்கப்பட்டது. இதனால், திரையரங்குகளில் மக்களின் கூட்டம் குறையத் தொடங்கியது.

இதனைத் தொடர்ந்து சற்று இயல்பு நிலைக்கு திரும்பிய இவ்வேளையில், உயர் நட்சத்திரங்களின் படங்களுக்கு மட்டுமே மக்கள் திரையரங்கிற்கு வரும் சூழல் சில மாதங்களாக இருந்து வந்தது. இதனால், சிறு பட்ஜெட்டில், புதுமுக நடிகர்களால் எடுக்கப்பட்ட பல படங்கள் கிடப்பில் போடப்பட்டன.

தற்போது மக்கள் சிறிய பட்ஜெட் படங்களை கொண்டாடும் நிலை வந்துவிட்டதால், கிடைக்கும் நாட்களில் சிறிய படங்களை வெளியிட தயாரிப்பாளர்கள் முடிவு செய்துவிட்டனர்.

இதனைத் தொடர்ந்து ஜூன் 23 அன்று, சீனு ராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்த மாமனிதனும் ஜுன் 24 ல்
பார்த்திபனின் இரவின் நிழல்,
அசோக் செல்வன் நடித்த வேழம்,
கலையரசன் நடித்த டைட்டானிக்,
சிபிராஜ் நடித்த மாயோன்,
அரவிந்த் சாமி நடித்த கள்ளபார்ட், உள்ளிட்ட படங்கள் இதுவரை வரிசைகட்டி நிற்கின்றன. இன்னும் சில படங்கள் இவற்றோடு இணையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related post