இன்னைக்கு என்னென்ன படம் ரிலீஸ்.? வாங்க பார்க்கலாம்!

வெள்ளிக்கிழமை என்றாலே நினைவுக்கு வருவது ஒன்று கோவிலுக்குச் செல்வது மற்றொன்று புதுபடம் வெளிவரும் என்பது தான்.
வெள்ளிக்கிழமையையும் சினிமாவையும் எப்போதுமே பிரிக்க இயலாது. வார இறுதி நாள் என்பதால் குடும்பத்தோடு திரையரங்கிற்குச் செல்ல அத்தினம் ஏதுவானதாகவும் அமைந்துள்ளது.
அப்படியாக இந்த வாரத்தில்,
விஜய் சேதுபதி நடிப்பில் சீனு ராமசாமி இயக்கத்தில் உருவாகியிருக்கும் மாமனிதன்.
சிபிராஜ் நடிப்பில் உருவாகியிருக்கும் மாயோன்
சுந்தர் சி மற்றும் ஜெய் நடிப்பில் உருவாகியிருக்கும் பட்டாம் பூச்சி
அசோக் செல்வன் நடிப்பில் உருவாகியிருக்கும் வேழம்.
மற்றும் போலாமா ஊர்கோலம் உள்ளிட்ட ஐந்து படங்கள் இன்றைய வார திரையரங்குகளை ஆக்கிரமிக்க வந்திருக்கிறது.