Mr. & Mrs. Mahi Review 3.5/5

 Mr. & Mrs. Mahi Review 3.5/5

Director: SHARAN SHARMA

Artist: RAJKUMMAR RAO, JANHVI KAPOOR , KUMUD MISHRA , ZARINA WAHAB , RAJESH SHARMA , ARJIT TANEJA , PURNENDU BHATTACHARYA ,YAMINI DAS

WRITTEN BY: NIKHIL MEHROTRA, SHARAN SHARMA

DIRECTOR OF PHOTOGRAPHY : ANAY OM GOSWAMY (ISC)

EDITOR: NITIN BAID

MUSIC SUPERVISOR: AZEEM DAYANI

PRODUCTION DESIGNER: SHARANYA MENON

MUSIC: AADESH SHRIVASTAVA, VISHAL MISHRA, TANISHK BAGCHI, JAANI, ACHINT & YUVA
HUNNY & BUNNY, DHRRUV DHALLA

கதைப்படி,

நாயகன் ராஜ்குமார் ராவ் கிரிக்கெட் விளையாட்டில் சாதிக்க முடியாததால், தனது அப்பாவின் கிரிக்கெட் பொருட்கள் விற்கும் கடையில் வேலை பார்த்து வருகிறார்.

தொடர்ந்து நாயகி ஜான்வி கபூருடன் திருமணமும் நடைபெறுகிறது. தொடர்ந்து சாதிக்க முடியாததால், வாழ்வின் விரக்தியில் இருக்கிறார்.

எதாவது சாதித்து மக்கள் மத்தியில் பிரபலமாக வேண்டும் என்று இருக்கும் ராஜ்குமார், தனது மனைவி ஜான்வி கிரிக்கெட் விளையாடுவதை பார்த்து ஆச்சர்யப்படுகிறார். அவரை ட்ரெய்னிங்க் செய்து, கிரிக்கெட் வீரராக மாற்ற நினைக்கிறார்.

பிரபலமாக வேண்டும் என்ற ராஜ்குமாரின் கனவு பலித்ததா இல்லையா என்பதே படத்தின் மீதிக் கதை.

நாயகன் ராஜ்குமார் ராவ், தனக்கான கதாபாத்திரத்தை மிகவும் இயல்பாக செய்து முடித்து அசத்தியிருக்கிறார். என்னப்பா இப்படி நடிக்கிற என்று சொல்லும் அளவிற்கு தனது நடிப்பில் முத்திரை பதித்திருக்கிறார்.

பார்ப்பதற்கு அழகாகவும் காட்சிகளில் அளவாகவும் நடித்து அழகூற தனது நடிப்பில் முத்திரை பதித்திருக்கிறார் ஜான்வி கபூர்.

ஜோடியாக இருவரும் தங்களுக்கான பங்களிப்பை மிகவும் யதார்த்தமாக கொடுத்து அசத்தியிருக்கிறார்கள். கிரிக்கெட் பயிற்சி எடுக்கும் போது இருவருக்குமான கெமிஸ்ட்ரி நன்றாகவே வொர்க்-அவுட் ஆகியுள்ளது.

பின்னணி இசை படத்திற்கு மிகப்பெரும் பலமாக வந்து நிற்கிறது. பாடல்களும் சோடை போகவில்லை.

ஒளிப்பதிவு கலர்ஃபுல்லாக தனக்கான வெளிச்சத்தை நச்சென்று காட்டியிருக்கிறது.

Mr. & Mrs. Mahi – Sure Hit

Related post