Mudhal Nee Mudivum Nee Movie Review

 Mudhal Nee Mudivum Nee Movie Review

இசையமைப்பாளர் தர்புகா சிவா இயக்கத்தில் புதுமுகங்கள் பலர் நடிப்பில் இந்த வாரம் ஜி 5 ஒடிடி தளத்தில் வெளியாகி உள்ளது இந்த படம். ஹாலிவுட் என்றாலே ஆக்சன் படங்கள் நியாபகம் வரும் ஆனால் சத்தமில்லாமல் அங்கு ஹிட்டடிகும் படங்களில் கமிங் ஆப் ஏஜ் வகையும் ஒன்று.அந்த வகையில் தமிழில் இந்த மாதிரி வெளிவந்த படங்கள் குறைவு என்றாலும் குறிப்பிட்ட சில படங்களை சொல்லலாம்,அதில் இந்த படமும் இருக்கும் என்று சொல்லலாம். படத்தின் கதை 1999 ம் ஆண்டு பள்ளி பருவம் முடிக்கும் குறிப்பிட்ட நண்பர்களை பற்றிய கதை தான் இது.அவர்கள் வாழ்வில் ஏற்படும் மகிழ்ச்சி, வலிகள்,கோபம் மற்றும் காதல் என அனைத்தையும் சொல்லி கூட கொஞ்சம் ஃபேண்டஸி சேர்த்து கொடுத்திருக்கிறார் இயக்குனர் டர்புகா சிவா.அவரே இந்த படத்தின் இசையமைப்பாளரும் கூட.

படத்தின் நாயகர்கள் என்று சொன்னால் படத்தில் வரும் அனைத்து கதாபாத்திரம் என்றே சொல்லலாம்,அப்படி படத்தில் உள்ள அனைவருக்கும் ஒரு அழுத்தமான கதாபாத்திர வடிவமைப்பு அமைத்து இருக்கிறார் இயக்குனர்,உதாரணம் படம் முடிந்த பிறகும் வினோத், சைனீஸ், ரேகா என்று கதாபாத்திர பெயர்களே மனதில் பதிந்து விடுகிறது.படத்தின் பாதி பகுதி 1999ம்ஆண்டு நடப்பதால் அன்றைய கால கட்டத்தில் இருந்த அனைத்து விஷயங்கள் படத்தில் காட்டியுள்ளார் இயக்குனர். படத்தின் ஒளிப்பதிவாளர் மற்றும் இசையமைப்பாளர் இருவரும் படத்திற்கு மேலும் அழகு சேர்கின்றனர். என்ன தான் படம் பார்த்து முடித்தவுடன் இன்னொரு படத்தின் சாயல் மனதில் வருவதை தடுக்க முடியவில்லை. மொத்தத்தில் 80ஸ் கிட்ஸ் ரசிகர்களை அவர்கள் பள்ளி பருவ காலத்திற்கு இந்த படம் அழைத்து செல்லும் என்பதில் சந்தேகம் இல்லை.

முதல் நீ முடிவும் நீ : முதல் தொடங்கி இறுதி வரை பார்த்து ரசிக்கலம்.

Related post