Murungakai Chips Movie Review


சாந்தனுவும் அதுல்யாவும் புதுமண தம்பதிகளாகவே மாறிவிடுகிறார்கள். உணர்ச்சி கலந்த கவர்ச்சிகர நடிப்பை இருவருமே சிறப்பாக நடித்துள்ளனர். ஒரே அறையில் போரடிக்காமல் லாஜிக் பார்க்காமல் இயக்குனர் கதையை கையாண்ட விதம் அருமை. குளியலறை காட்சிகள் மற்றும் இருவருக்குமான நெருக்கமான விளையாட்டு காட்சிகளும் இன்னும் கூடியிருந்தால் ஏ சான்றிதழுக்கான காரணம் பொருத்தமாக இருந்திருக்கும். இது வயது வித்தியாசமின்றி குடும்பத்துடன் சேர்ந்து பார்க்கும் படமாக தெரியவில்லை.
யோகிபாபு, முனீஸ்காந்த் காட்சிகளை விட மயில்சாமி, மதுமிதா, மனோபாலா சார் நடித்திருக்கும் காட்சிகள் ரசிக்கவும் சிரிக்கவும் வைக்கிறது. தயாரிப்பாளருக்குள் நல்ல ஒரு நடிகரும் பாடலாசிரியரும் இருப்பதை கண்டறிந்து பதிவு செய்தமைக்காக இயக்குனர் ஸ்ரீஜாரை பாராட்டலாம். இசையமைப்பாளர் தரண் குமாரின் பாடல் இசையும் பின்னணி இசையும் படத்திற்கு மிகப்பெரிய பலம் சேர்க்கிறது. இளமையான ஒளிப்பதிவை தந்த ரமேஷ் சக்கரவர்த்தியையும், காட்சிகளின் நீளத்தை சரியாக உணர்ந்து படத்தொகுப்பு செய்த படத்தொகுப்பாளர் ஜோமின் மேத்யூ மற்றும் படத்திற்கு கலை இயக்கம் புரிந்த நர்மதாவையும் பாராட்டலாம். இரட்டை அர்த்த வசனங்களை ஓரளவுக்கு கட் செய்த சென்சார் போர்டையும் பாராட்டலாம். இது பொழுதுபோக்கிற்காக மட்டுமே எடுக்கப்பட்ட படம் என்று படக்குழுவினர் படத்தை திரையிடுவதற்கு முன்பே உறுதியளித்து இருப்பதால் அறிவாளிகள் திரையரங்குகளில் நுழைந்து விடாதீர்கள்.
முருங்கக்காய் சிப்ஸ் பார்வையாளர்களை சற்று முறுக்கேற்ற தான் செய்கிறது.