அடுத்தடுத்து 6 படங்கள்… பிஸியாகிறார் நயன்தாரா!

 அடுத்தடுத்து 6 படங்கள்… பிஸியாகிறார் நயன்தாரா!
Digiqole ad

15 வருடங்களுக்கும் மேலாக தென்னிந்திய சினிமாவில் நாயகியாக கால் ஊன்றி தனது திறமையை நிரூபித்து வருகிறார் நயன்தாரா. சில மாதங்களுக்கு முன் திருமணம் ஆன நிலையில், இனி நயன்தாரா நடிப்பாரா என்ற ரசிகர்கள் சிலரிடம் கேள்விகள் எழ ஆரம்பித்துள்ளது.

இந்நிலையில் அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் பிரித்விராஜுக்கு ஜோடியாக கோல்டு என்ற படத்தில் நயன்தாரா நடித்துள்ளார். இந்த படம் வருகின்ற டிசம்பர் மாதம் இரண்டாம் தேதி தமிழ், மலையாள ஆகிய மொழிகளில் வெளியாக உள்ளது.

இதைத்தொடர்ந்த நயன்தாரா கனெக்ட் என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தின் டீசர் நயன்தாராவின் பிறந்தநாள் அன்று வெளியாக உள்ளது. இப்படத்தில் வினய், சத்யராஜ் ஆகியோர் நயன்தாராவுடன் நடித்துள்ளனர்.

இதைத்தொடர்ந்த அட்லீ இயக்கத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக ஜவான் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் மூலம் நயன்தாரா பாலிவுட்டில் கால் பதிக்கிறார்.

இந்த படம் அடுத்த ஆண்டு ரிலீஸ் ஆக உள்ளது. இதைத்தொடர்ந்த அகமது இயக்கத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நயன்தாரா இறைவன் என்ற படத்தில் நடித்து வருகிறார்.

மேலும் நிலேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் நயன்தாராவின் 75 வது படமும் உருவாகி வருகிறது.

இதைத்தொடர்ந்து மலையாள படம் ஒன்றிலும் நிவின் பாலி உடன் நடித்து வருகிறார். இவ்வாறு தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் நயன்தாரா நடிப்பில் ஈடுபட்டு ரசிகர்களை மகிழ்ச்சியாகவே வைத்திருக்கப் போகிறாராம்.

மேலும் வருகின்ற நவம்பர் 18 நயன்தாராவின் வேறு படங்களின் அப்டேட்டும் வெளியாகும் என எதிர்பார்க்கலாம் என்கிறது கோலிவுட் வட்டாரம்…

 

Digiqole ad
Spread the love

Related post