திருமணம் முடிந்த மறுநாளே சர்ச்சையில் சிக்கிய நயன்தாரா!
இயக்குனர் விக்னேஷ் சிவன் – நடிகை நயன்தாரா இருவரின் திருமணம் நேற்று முன்தினம் சென்னையில் மிகவும் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இவ்விழாவில் மிக முக்கியமான நட்சத்திரங்கள் மட்டுமே கலந்து கொண்டனர்.
இவர்கள் இருவரும் திருமணம் முடிந்த கையோடு , நேற்று திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு தரிசனத்திற்கு சென்றனர்.
அப்போது, வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால் கோவில் வளாகத்திற்குள் நடிகை நயன்தாரா காலணி அணிந்து சென்றுள்ளார். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து நடவடிக்கை எடுக்க தேவஸ்தானம் போர்டு முன்வந்தது. இச்சம்பவத்திற்காக தாங்கள் இருவரும் மன்னிப்பு கோருவதாக திருப்பதி தேவஸ்தானம் போர்டுக்கு கடிதம் எழுதியுள்ளார் விக்னேஷ் சிவன்.