ஓகே சொன்ன படக்குழு… ரிலீஸாகும் நயன்தாராவின் “கனெக்ட்”!

 ஓகே சொன்ன படக்குழு… ரிலீஸாகும் நயன்தாராவின் “கனெக்ட்”!

மாயா, கேம் ஓவர் படங்களை இயக்கிய அஸ்வின் சரவணன் இயக்கத்தில் நயன்தாரா நடிப்பில் உருவாகியிருக்கும் படம் தான் கனெக்ட்.

இப்படம் வரும் 22 ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது. இப்படம் வெறும் 99 நிமிடங்கள் ஓடக்கூடிய படமாக உருவாகி இருக்கிறது.

இந்த படத்தின் ஸ்வாரஸ்யம் போய்விடும் என்பதால் படத்திற்கு இடைவேளை விடாமல் படத்தினை இயக்கியிருக்கிறார் இயக்குனர்.

இடைவேளை இல்லாத படத்தை நாங்கள் திரையிடமாட்டோம் என திரையரங்கு உரிமையாளர்கள் அனைவரும் கூறிவிட்டதால், படத்தினை வெளியிட சிக்கல் எழுந்தது.

திரையரங்கு உரிமையாளர்களின் கோரிக்கையை ஏற்று படத்தின் 59வது நிமிடம் 49வது நொடியில் இடைவேளையை வைத்துக் கொள்ள படக்குழு ஓகே சொல்லியிருக்கிறது.

இதனால், படம் திட்டமிட்டபடி 22 ஆம் தேதி வெளியாகும் என தெரிகிறது.

படத்தினை விக்னேஷ் சிவன் தனது ரெளடி பிக்சர்ஸ் சார்பில் தயாரித்திருக்கிறார்.

 

Related post