கமலுக்கு ஜோடியாகிறார் நயன்தாரா.?

 கமலுக்கு ஜோடியாகிறார் நயன்தாரா.?

உலகநாயகன் கமல் தற்போது ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தினை முடித்ததும் ஹச் வினோத் இயக்கத்தில் உருவாகும் ஒரு படத்தில் நடிக்கவிருக்கிறார்.

இப்படத்தின் ஆரம்ப கட்ட பணிகளை துவக்கி விட்டார் இயக்குனர் ஹச் வினோத். அதற்கு அடுத்தபடியாக மணிரத்னம் இயக்கத்தில் தனது 234வது படத்தில் நடிக்கவிருக்கிறார் கமல்ஹாசன்.

அடுத்தவருடம் அதற்கான படப்பிடிப்பு துவங்கும் என படக்குழு ஏற்கனவே அறிவித்திருந்திருந்தது.

இந்நிலையில், இந்த படத்தில் கமல்ஹாசனுக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவரும் வரை காத்திருக்கத்தான் செய்ய வேண்டும்.

 

Related post