விக்னேஷ் சிவன் – நயன்தாரா தம்பதி குழந்தைகள் சர்ச்சை விவகாரம்; இன்று மாலை வெளியாகிறது அறிக்கை!!

 விக்னேஷ் சிவன் – நயன்தாரா தம்பதி குழந்தைகள் சர்ச்சை விவகாரம்; இன்று மாலை வெளியாகிறது அறிக்கை!!

கடந்த ஜூன் மாதம் நடிகை நயன்தாராவிற்கும் இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கும் இடையே திருமணம் நடைபெற்றது.

இந்நிலையில், வாடகை தாய் மூலமாக இந்த நட்சத்திர ஜோடிக்கு இரட்டைக் குழந்தை பிறந்தது. கடந்த 9-ம் தேதி அந்த குழந்தைகளுடன் இருக்கும் புகைப்படங்களை பகிர்ந்த இயக்குனர் விக்னேஷ் சிவன் அதிகாரப்பூர்வமாக தன்னுடைய சமூகவலைதளப் பகுதிகளில் குழந்தைகள் பிறந்ததை அறிவித்தார்.

வாடகை தாய் மூலம் பிறந்த குழந்தைகள் பற்றி பல கேள்விகளும் சர்ச்சைகளும் கிளம்பின…

வாடகை தாய் விவகாரம் குறித்து விசாரிக்க சுகாதார இணை இயக்குநர் தலைமையில் மூன்று பேர் கொண்ட குழுவை சமீபத்தில் அமைச்சர் மா.சுப்ரமணியன் அமைத்தார்.

இந்த நிலையில், நேற்று சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், வாடகை தாய் விவகாரம் குறித்து அமைக்கப்பட்ட விசாரணை குழு அறிக்கை இன்று மாலை வெளியிடப்படும் என தெரிவித்தார்.

 

Related post