KRK வெற்றி; மகிழ்ச்சியைக் கொண்டாட நயன்தாராவை விக்னேஷ் சிவன் எங்கு அழைத்துச் சென்றார் தெரியுமா.?
விஜய் சேதுபதி – நயன்தாரா – சமந்தா உள்ளிட்டோரின் வித்தியாசமான நடிப்பில் திரையரங்கில் இன்னும் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் படம் தான் “காத்துவாக்குல ரெண்டு காதல்”.
தற்போதுவரை இப்படம் சுமார் 35 கோடிக்கும் மேல் வசூல் செய்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. இதனால் இப்படம் நல்ல ஹிட் அடித்த திரைப்படமாக பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் தற்போது இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இயக்குனர் விக்னேஷ் சிவன் தனது காதலியான நயன்தாராவுடன் ஷிரடிக்கு சென்று தரிசனம் செய்துள்ளார்.
அந்த புகைப்படத்தை பதிவிட்டு விக்னேஷ் சிவன் கண்மணியுடன் சீரடி சாயி பாபாவை சந்தித்து விட்டு வருவதாக பதிவிட்டுள்ளார்.