25 கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு விக்னேஷ் சிவன் – நயன்தாரா தம்பதிக்கு நோட்டீஸ் விட்ட நெட்ஃப்ளிக்ஸ்!!

 25 கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு விக்னேஷ் சிவன் – நயன்தாரா தம்பதிக்கு நோட்டீஸ் விட்ட நெட்ஃப்ளிக்ஸ்!!
Digiqole ad

சில தினங்களுக்கு முன் தமிழ் சினிமாவின் நம்பர் ஒன் நடிகையான நயன்தாராவை இயக்குனர் விக்னேஷ் சிவன் திருமணம் செய்து கொண்டார்..

இந்த காதல் திருமணத்தில் பல முக்கியமான நட்சத்திரங்கள் கலந்து கொண்டனர். சென்னையை அடுத்த ஒரு நட்சத்திர விடுதியில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிலையில், இத்திருமண நிகழ்ச்சியை ஒளிபரப்பு உரிமையை கைப்பற்றியிருந்தது நெட்ஃப்ளிக்ஸ்.

அதற்காக, திருமண நிகழ்விற்கான அனைத்து செலவுகளையும் (கோடிக்கணக்கில்) கவனித்துக் கொண்டது நெட்ஃப்ளிக்ஸ்.

விரைவில், நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் திருமண வீடியோவை வெளியாக இருக்கிறது. இந்நிலையில், சில தினங்களுக்கு முன் விக்னேஷ் சிவன் தனது சமூக வலைதள பக்கத்தில் திருமண புகைப்படங்கள் ஒரு சிலவற்றை பதிவேற்றம் செய்திருந்தார்.

இதனால், கடுப்பான நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனம், ஒப்பந்தத்தை மீறி திருமண புகைப்படங்களை விக்னேஷ் சிவன் வெளியிட்டதாகவும், ஒப்பந்தத்தை ரத்து செய்து திருமண நிகழ்ச்சிக்கான செலவு சுமார் 25 கோடியை பெற்றுத்தருமாறு நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனம் விக்னேஷ் சிவன் – நயன்தாராவிற்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளதாம்.

 

Digiqole ad
Spread the love

Related post