இன்று நடைபெறும் விக்கி – நயன்தாரா திருமணம்… கட்டுப்பாடுகளை கடுமையாக்கிய ஜோடி!

 இன்று நடைபெறும் விக்கி – நயன்தாரா திருமணம்… கட்டுப்பாடுகளை கடுமையாக்கிய ஜோடி!

இயக்குனர் விக்னேஷ் சிவனும் நயன்தாராவும் கடந்த ஐந்து ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இந்நிலையில், இவர்களின் திருமணம் முடிவு செய்யபப்ட்டு சென்னை அடுத்துள்ள மகாபலிபுரத்தில் பிரம்மாண்டமான செட் ஒன்று அமைக்கப்பட்டு இன்று அங்கு திருமணம் நடைபெறவிருக்கிறது.

இத்திருமணத்தில் பல முக்கியமான நட்சத்திரங்கள் கலந்து கொள்ளவிருக்கின்றனர். விழாவினை தனியார் ஓடிடி தளம் ஒளிப்பதிவு செய்து வருகிறது. இயக்குனர் கெளதம் மேனன் தலைமையில் இந்த நிகழ்ச்சியை படமாக்கப்படுகிறது. இதை ஒரு பிரபல ஓடிடி தளத்தில் வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த திருமணத்தில் கலந்து கொள்பவர்கள், செல்போன் கொண்டு வர தடை விதிக்கப்பட்டுள்ளதாக இன்னும் பல கட்டுப்பாடுகளும் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்பவர்களுக்கு விதிக்கப்பட்டுள்ளது.

திருமண நிகழ்ச்சியை முன்னிட்டு பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.

 

Related post