மாமன்னனை தொடர்ந்து மாரி செல்வராஜின் அடுத்த அதிரடி!

 மாமன்னனை தொடர்ந்து மாரி செல்வராஜின் அடுத்த அதிரடி!

பாரியேறும் பெருமாள், கர்ணன் என இரு படங்களின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு இயக்குனர் மாரி செல்வராஜ் மாமன்னன் என்ற படத்தை இயக்கி வருகிறார்.

இப்படத்தில் உதயநிதி ஸ்டாலின், கீர்த்தி சுரேஷ், பஹத் பாசில் மற்றும் வடிவேலு உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடித்திருக்கின்றனர்.

சில தினங்களுக்கு முன் இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் அதற்கான போஸ்ட் ப்ரொடக்‌ஷன் பணிகளில் மிகவும் மும்முரமாக இருந்து வருகிறார் மாரி செல்வராஜ்.

இப்படத்தினைத் தொடர்ந்து மாரி செல்வராஜ், அடுத்ததாக வெப் சீரிஸ் ஒன்றை இயக்கவிருப்பதாகவும் அதை டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் தயாரிக்கவிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

தான் சொல்ல வேண்டிய கருத்தை இன்னும் அழுத்தமாகவும் பலமாகவும் சொல்ல ஓடிடி தளம் கைகொடுக்கும் என்பதாலே இந்த முடிவை இயக்குனர் மாரி செல்வராஜ் எடுத்திருப்பதாக தெரிகிறது.

எதுவாகினும், படைப்பாளனுக்கு படைப்பு சுதந்திரம் என்பது இன்னமும் ஒரு கேள்விக்குறியாகவே இருப்பது வேதனை தான்.

 

Related post