வாரிசு படத்துக்கு எமனாக வந்து நின்ற ரஜினி படம்..!!

 வாரிசு படத்துக்கு எமனாக வந்து நின்ற ரஜினி படம்..!!

விஜய் நடிப்பில் தயாராகி வரும் வாரிசு படம் வருகிற பொங்கல் அன்று வெளியாகும் என எதிர்பார்த்த நிலையில் அதில் பெரிய சிக்கலே இருக்கிறது.

அதாவது தமிழ் நாட்டில் எந்த பிரச்சினையும் இல்லாத நிலையில் தமிழ். தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகும் வாரிசு படம் ஆந்திராவில் ரிலீஸ் ஆகுவதில் தான் சிக்கலே உள்ளன.

அதாவது பண்டிகை நாள்களில் திரையரங்குகளில் வெளியாக நேரடி தெலுங்கு படங்களுக்கே முன்னுரிமை அளிக்கப்படும் என ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாம். அப்படி பார்த்தால் வாரிசு படம் தெலுங்கில் டப் செய்யப்பட்ட பட லிஸ்டில் இருப்பதால் தள்ளிப்போகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு பின்னனியில் இருப்பது என்ன என் ஆராய்ந்து பார்த்தால்…

2019ஆம் ஆண்டு வெளியான பேட்ட திரைப்படத்தின் தெலுங்கு டப்பிங் ஆந்திராவில் வெளியிட கூடாது என இப்பொழுது உள்ள வாரிசு பட தயாரிப்பாளர் தில் ராஜு கோரிக்கை வைத்திருந்தார். அந்த பிரச்சினைதான் இப்பொழுது தில் ராஜுவுக்கு எதிராக திரும்பியிருக்கிறது.

பேட்ட திரைப்பட தெலுங்கு பதிப்பை பிரசன்ன குமார் தான் வாங்கி ஆந்திராவில் வெளியிட்டார். அவருக்கு எதிராக தான் தில் ராஜு அன்று அந்த கோரிக்கையை கூறினார். ஆனால் இப்பொழுது அதே பிரசன்னா குமார் தான் தெலுங்கு புரடியூசர் கவுன்சிலில் செக்ரட்டரியாக இருக்கிறாராம். அவர் தான் வாரிசு படத்தை வெளியிட விடாமல் தில் ராஜுவுக்கு எதிராக நிற்கிறார் என்று தகவல்கள் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

 

Related post