நித்தம் ஒரு வானம் விமர்சனம்

 நித்தம் ஒரு வானம் விமர்சனம்

அசோக் செல்வன், ரித்து வர்மா, ஷிவாதமிக்க, அபர்ணா பாலமுரளி, சிறப்பு தோற்றத்தில் முக்கிய நடிகர், காளி வெங்கட் மற்றும் பலர் நடிப்பில், ர.கார்த்திக் இயக்கத்தில், கோபி சுந்தர் இசையில் உருவாகியுள்ள படம் “நித்தம் ஒரு வானம்”. ஸ்ரீநிதி திருமலா மற்றும் வயக்காம் 18 இனைந்து இப்படத்தை தயாரித்துள்ளனர். தரண் பின்னணி இசை அமைத்துள்ளார்.

கதைப்படி,

கதைக்குள் சுவாரஸ்யமான மற்றும் பல விதான எமோஷன்களோடு இரண்டு கதை… படத்தின் கதை என்று பார்த்தல், மிகவும் சுத்தமாகவும் இண்ட்ரோவர்ட்டாகவும் வளம் வருகிறார் நாயகன் அசோக் செல்வன். அவருக்கு திருமணம் நியச்சயிக்கப்பட்டிருந்த நிலையில் அத்திருமணம் நின்று போக… வாழ்க்கையின் மீது ஆசை இல்லாதவராய் திகைத்து நிற்கிறார் நாயகன் அசோக்.

அவரை சுற்றியிருப்பவர்கள் அதையே பேச விரக்தியும் சோகமும் மட்டுமே மிச்சம். அப்படி இருக்கும் நாயகன் அசோக்கின் வாழ்க்கையின் மாறுதல் ஏற்பட்டதா? கதைக்குள் ஒளிந்துள்ள இரண்டு கதைகள் என்ன? அந்தக்கதைகள் நமக்கும் ஒரு மாற்றத்தை தருமா? என்பது படத்தின் இரண்டாம் பாதி.

வழக்கம் போல் அனைவர் மனதையும் கவர்ந்திருக்கிறார் அசோக் செல்வன். 3 விதமான கேரக்டர்கள் அவை அனைத்திற்கும் பொருந்தியுள்ளார். ஆக்ஷன் காட்சிகளில் அதகளமாகவும், ரொமான்டிக் காட்சிகளில் ரோமியோவாகவும் ரசிக்க வைத்துள்ளார்.

ரித்து வர்மா, ஷிவாதமிகா, அபர்ணா பாலமுரளி என மூவரும் அளவான அழகான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர். மூவரும் மூன்று கதையில் முக்கனிகள் தான்.

ஒளிப்பதிவு காட்சிக்கு காட்சி அழகை சேர்த்து. இசை கொஞ்சம் சுமார் தான்.

பஹத் பாசில் நடிப்பில் 2013ம் ஆண்டு வெளியான “நார்த் 24 காதம்” படத்தின் ஒன் லைனை இயக்குனர் ர.கார்த்திக் வேறுவிதமாக பயன்படுத்தியுள்ளார். மேலும், படத்திற்கு அளவுக்கு அதிகப்படியான பாட்டுகள் மந்தம் தட்டுகிறது. இருந்தாலும் ஒரே படத்தில் 3 கதைகளை சிந்தித்து இயக்குவது கடினம் தான்.

ஒரு சில படங்கள் தான் வாழ்க்கை பற்றிய ஏதோ ஓர் புரிதலை ஏற்படுத்தும். அந்த வகையில் தான் இந்த படமும்.

நித்தம் ஒரு வானம் – காதலின் நிசப்தம் – (3/5)

Spread the love

Related post

You cannot copy content of this page