விஜய்க்கு வில்லனாகும் நிவின் பாலி!

தளபதி விஜய் தற்போது வம்சி இயக்கத்தில் வாரிசு என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் வரும் பொங்கல் தின கொண்டாட்டமாக திரைக்கு வர இருக்கிறது.
இப்படத்தினைத் தொடர்ந்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கவிருக்கிறார். இதற்கான பிற நடிகர், நடிகைகளின் தேர்வை இயக்குனர் லோகேஷ் செய்து வருகிறார்.
இப்படத்தில் விஜய்க்கு வில்லன்களாக அர்ஜுன், சஞ்சய் தத் ,பிரகாஷ்ராஜ், பிருத்விராஜ் என நால்வர் நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் பிருத்விராஜ் கால்ஷீட் பிரச்சனை காரணமாக இந்தப் படத்தில் இருந்து விலகி விட்டதாகவும் அவருக்குப் பதிலாக பிரபல மலையாள ஹீரோ, நிவின் பாலியிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.
கிட்டத்தட்ட அவரும் ஓகே சொல்லிவிட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. விரைவில் இப்படத்தினைக் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவரும் என நம்பப்படுகிறது.