OH MY GHOST விமர்சனம்

 OH MY GHOST விமர்சனம்

சன்னி லியோன், தர்ஷா குப்தா, சதிஷ், பாலா, தங்கதுரை, யோகி பாபு, ரவி மரியா, மொட்டை ராஜேந்திரன் என பலர் நடித்த படம் “OH MY GHOST”. இப்படத்திற்கு ஜாவித் இசையமைத்துள்ளார். “சிந்தனை செய்” படத்தின் இயக்குனர் யுவன் இப்படத்தை இயக்கியுள்ளார்.

கதைப்படி,

காரணமே தெரியாமல், பேய்களை தன் கட்டுக்குள் வைக்கும் ஒரு கும்பல் தான் பாலாவின் கும்பல். அவர்கள் அவிழ்த்து விட்ட ஒரு பேய், அடல்ட் படங்களை இயக்கும் இயக்குனராக சுற்றித்திரியம் சதீஷ் வீட்டில் தஞ்சமடைய. அந்த வீட்டிற்கு வரும் தர்ஷா குப்தா மீது ஊடுருவுகிறது பேய். அந்த பேய் தான் சன்னி லியோன்.

அவருக்கு ஒரு பிளாஷ் பேக். பின்பு பேயை ஈசியாக விரட்டுகிறார் மொட்டை ராஜேந்திரன்.

இயக்குனருக்கு ஒரே ஒரு விஷயத்திற்காக பாராட்டுக்கள் தெரிவித்தே ஆகவேண்டும். குடும்பப் படங்களில் காமெடி என்ற பெயரில், டபுள் மீனிங்காகவும், அடல்ட் ஜோக்குகளையும் பேசி அனைவரின் கோபத்திற்கும் ஆளான சதீஷை. இவர் ஒருவரே சரியாக பயன் படுத்தியிருக்கிறார். ஆமாங்க, சதீஷ் ஒரு பிட்டு பட இயக்குனர் இப்படத்தில். அவரின் கதாபாத்திரமே அப்படி அமைந்ததால் அவர் பேசும் எந்த வசனத்திற்கும் நமக்கு கோபம் வருவதில்லை.

முதல் பாதியில் இடைவேளைக்கு முன் தான் இன்ட்ரோ ஆகிறார் சன்னி லியோன். அதுவும் ஒரு (பிட் சீனில்) சில நொடி என்பதை அப்படி சொன்னேன்.

இரண்டாம் பாதியும் ஒரு 10 காட்சிகள் மட்டுமே வருவார் சன்னி லியோன். எதிர் பார்த்தவர்களுக்கு ஏற்றம் தான். சன்னிலியோனை வைத்து அவர்களின் மார்க்கெட்டை மட்டும் விரிவு படுத்தியுள்ளது தயாரிப்பு குழு.

சதீஷ் ஹீரோ என்பதை விட அவர் படம் முழுக்க தலைமுறை தலைமுறையாக அடல்ட் கதைகளை சொல்லும் ஒருவராக வருகிறார் என்று சொல்லலாம்.

வருடத்திற்கு 1 படம் நடித்தால் போதும் என்று சொன்ன தர்ஷா குப்தா வெறும் 4 காட்சிகள் தான் வந்துள்ளார். இதற்கு முன் அவர் நடித்த ருத்ர தாண்டவம் படத்தில் 2 காட்சிகள் மட்டுமே வந்திருப்பார் என்பதை நினைவு வைத்துக் கொள்ளுங்கள்.

படம் பார்த்துக் கொண்டிருக்கும் போது, விஜய் TV சேனலை மாற்றலாம் என்று நினைத்தால் ரிமோட் இல்லை. என்னடா என்று சுதாரித்த பொது தான் இது விஜய் தொலைக்காட்சி இல்லை படம் என்பது புரிந்தது. பாலா, தங்கதுரை, தர்ஷா குப்தா என அனைவரும் இருந்ததால் அப்படி தோன்றியதோ என்னமோ.

பல படங்களின் கதையை மீண்டும் இயக்கியுள்ளார் இயக்குனர் யுவன். படத்தில் நம்மை ரசிக்க வைத்தது இசை மட்டுமே.

OH MY GHOST – ரவை இல்லாத உப்மா படம்.

Related post