Operation jujupi – திரைப்படம் விமர்சனம்

 Operation jujupi – திரைப்படம் விமர்சனம்

காமெடி நடிகர் சாம்ஸ் அவர்கள் கதையின் நாயகனாக நடித்திருக்கிறார். அண்ணாத்த, ஏனெமி போன்ற திரைப்படங்கள் இந்த தீபாவளிக்கு வெளியாகியுள்ள நிலையில் சத்தமில்லாமல் வெளியாகி ஓடி கொண்டிருக்கும் படம் தான் இந்த ஆபரேஷன் ஜுஜுபி. படத்தின் கதை, இந்த உலகம் தனக்கு பொருந்தவில்லை, இந்த உலகம் சரியாக இல்லை என்ற எண்ணத்தில் வாழும் சாம்ஸக்கு ஒரு அதிசய தண்ணீர் கிடைக்கிறது. அதை வைத்து கொண்டு இவர் இந்த உலகத்தை தனக்கு ஏற்றவாறு மாற்றினரா? இல்லையா ? என்பதை சொல்கிறது திரைப்படம்.

நடிகர் சாம்ஸ் கதை நாயகன் பெரியதாக நடிப்பை வெளிப்படுத்த வாய்ப்பு இல்லை என்றாலும், தனக்கு கொடுத்த வேலையை சிறப்பாக செய்கிறார் . படத்தில் அவரை தவிர பல நடிகர்கள் நடித்துள்ளனர். குறிப்பாக இடைவேளைக்கு பிறகு வரும் ராகவ் சிறிது நேரம் ஸ்கோர் செய்கிறார். இயக்குனர் அருண் காந்த் அவர் சொல்ல வந்த கருத்துகள் அனைத்தும் பாராட்டுக்குரியது தான் குறிப்பாக தேர்தல் எப்படி நடக்க வேண்டும் என்று தன்னுடைய ஆசையை இந்த படத்தில் திரைக்கதையாக மாற்றியுள்ளார்,இருந்தாலும் அதை படமாக்கி இருக்கும் விதத்தில் கோட்டை விடுகிறார். குறிப்பாக எதற்கு இந்த படத்தை ஆங்கிலத்தில் எடுத்தார் என்பது புரியவில்லை, படத்தின் ஒளிப்பதிவு மோசமாக உள்ளது. படத்தின் இடைவேளைக்கு பின்பு வரும் காட்சி அலுப்பை தருகிறது. இப்படி படம் முழுக்க பலவீனங்கள் நிறைய உள்ளது . இருந்தாலும் இவர் சொல்லியிருக்கும் மாற்றத்துக்கான கருத்துக்காக ஒருமுறை சென்று கண்டு மகிழலாம்.

Related post