ஒரு நொடி விமர்சனம் 3.25/5

 ஒரு நொடி விமர்சனம் 3.25/5

இயக்கம்: பி. மணிவர்மன்

நடிகர்கள்: தமன் குமார், வேல. ராமமூர்த்தி, எம். எஸ். பாஸ்கர், ஸ்ரீ ரஞ்சனி, பழ. கருப்பையா, தீபா சங்கர் , நிகிதா, அருண் கார்த்திக், விக்னேஷ் ஆதித்யா, கஜராஜ் ,
கருப்பு நம்பியார்

ஒளிப்பதிவு: கே. ஜி. ரத்தீஷ்

இசை: சஞ்சய் மாணிக்கம்

தயாரிப்பு: மதுரை அழகர் மூவிஸ் & ஒயிட் லாம்ப் பிக்சர்ஸ்

தயாரிப்பாளர்கள்: அழகர்.ஜி & கே.ஜி. ரத்தீஷ்

கதைப்படி,

தனது கணவரை(எம் எஸ் பாஸ்கர்) காணவில்லை என்று போலீஸ் ஸ்டேஷன் வந்து புகாரளிக்கிறார் ஸ்ரீ ரஞ்சனி.

இன்ஸ்பெக்டராக வரும் ஹீரோ தமன்குமார், இந்த வழக்கை கையில் எடுக்கிறார். கந்து வட்டிக்கு பணம் கொடுத்து சொத்துகளை அபகரிக்கும் வேலையை செய்து வருகிறார் வேல ராமமூர்த்தி.

அவரிடம் வாங்கிய கடனுக்காக தான் தனது கணவரை வேல ராமமூர்த்தி கடத்தியிருப்பார் என்று ஸ்ரீ ரஞ்சனி, தமனிடம் கூறுகிறார்.

வழக்கை தீவிரமாக விசாரித்து வரும் தமன், வழக்கின் அடுத்தடுத்த கட்டத்தை எட்டுகிறார். இதற்கிடையில், இளம்பெண்ணான நிகிதா கொலை செய்யப்பட்டு கிடக்கிறார்.

இந்த கொலை வழக்கிற்கும் எம் எஸ் பாஸ்கரின் வழக்கிற்கும் ஏதேனும் லிங்க் இருக்கிறதா என்ற கோணத்திலும் வழக்கை கொண்டு செல்கிறார் தமன்.

இறுதியில், இந்த வழக்கு என்னவானது.? குற்றவாளி யார் .?? என்பதை தமன் கண்டுபிடித்தாரா இல்லையா என்பதே படத்தின் மீதிக் கதை.

நாயகன் தமன் குமார், இன்ஸ்பெக்டராக தனது கேரக்டரை அளவாக செய்து அசத்தியிருக்கிறார். பல இடங்களில் தனது மேனரிசத்தால் கதாபாத்திரத்திற்கு உயிர் கொடுத்திருக்கிறார்.

தனது அனுபவ நடிப்பில் அசத்தியிருக்கிறார் நடிகர் எம் எஸ் பாஸ்கர். இவரைத் தொடர்ந்து வேல ராமமூர்த்தி, ஸ்ரீ ரஞ்சனி, பழ கருப்பையா, தீபா ஷங்கர் என படத்தில் நடித்த நடிகர்கள் அனைவரும் தங்களுக்காக கதாபாத்திரத்தை உணர்ந்து நன்றாகவே அதில் ஸ்கோர் செய்திருக்கிறார்கள்.

படத்தில், எந்த இடத்திலும் தொய்வு ஏற்படாத வண்ணம், திரைக்கதையில் நன்றாகவே மெனக்கெடல் செய்திருக்கிறார்.

யார் தான் இந்த குற்றத்தை செய்தார் என்று யாரும் கண்டுபிடிக்காத வண்ணம், ரசிகர்களை சீட்டின் நுனியில் அமர வைத்துவிட்டார் இயக்குனர்.

சஞ்சய் மாணிக்கம் அவர்களின் பின்னணி இசை படத்திற்கு ஒரு தூணாக வந்து நிற்கிறது.

கே. ஜி. ரத்தீஷ் அவர்களின் ஒளிப்பதிவும் எந்த ஒரு இடத்திலும் தப்பாகாமல், சரியாக செய்திருக்கிறது. நடிகர்களின் தேர்வும் கச்சிதம்.

மொத்தத்தில்,

ஒரு நொடி – சீட் எட்ஜ் கண்டெண்ட்…

Related post