19 வது சென்னை திரைப்படவிழாவில் விருது பெற்ற பா.இரஞ்சித் தயாரித்த “சேத்துமான்”

 19 வது சென்னை திரைப்படவிழாவில் விருது பெற்ற பா.இரஞ்சித் தயாரித்த “சேத்துமான்”
Digiqole ad

19 வது சென்னை திரைப்படவிழாவில் பா.இரஞ்சித் நீலம் புரொடக்சன்ஸ் தயாரித்த “சேத்துமான்” விருது பெற்றது.

19 வது சென்னை திரைப்படவிழாவின் விருதுகள் இன்று வழங்கப்பட்டது. இதில் கலந்துகொண்ட படங்களில் மூன்று படங்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.

முதல் பரிசு வசந்த் சாய் இயக்கத்தில் ” சிவரஞ்சனியும் சில பெண்களும்” படத்திற்கு வழங்கப்பட்டது.

இரண்டாம் பரிசு இரண்டு படங்களுக்கு வழங்கப்பட்டது.

பா.இரஞ்சித் தயாரிப்பில் அறிமுக இயக்குனர் தமிழ் இயக்கத்தில் “சேத்துமான் ” படத்திற்கும், கணேஷ் விநாயக் இயக்கத்தில் “தேன்” படத்திற்கும் இரண்டாம் பரிசுகள் வழங்கப்பட்டன.

விழாவில் பேசிய இயக்குனர் வசந்தபாலன் “சேத்துமான்” திரைப்படத்தை தயாரித்த பா.இரஞ்சித் க்கு வாழ்த்துக்கள்.
மராட்டிய படமான ‘பான்றி’ படம் கொடுத்த தாக்கத்தை சேத்துமான் படமும் கொடுத்தது. எழுத்தாளர் பெருமாள் முருகனின் கதை திரைப்படமாகியிருப்பது பெரு மகிழ்ச்சி. எழுத்தாளர்களின் சினிமா வருகை ஆரோக்கியமானது.
என பேசினார்.

Digiqole ad
Spread the love

Related post