படைப்பாளன் – விமர்சனம்

 படைப்பாளன் – விமர்சனம்

தியான் பிரபு இயக்கத்தில் தியான் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகி வெளிவந்திருக்கும் திரைப்படம் தான் “படைப்பாளன்”. இயக்குனராக வேண்டும் என்ற கனவோடு சென்னையை நோக்கி படையெடுக்கும் பல துடிப்பான இளம் இயக்குனர்களின் வாழ்வில் நடக்கும் ஒரு உண்மைச் சம்பவத்தை மையப்படுத்தி உருவாகியிருக்கும் திரைப்படம் தான் “படைப்பாளன்”.

இப்படத்தில் தியான் பிரபு, அஷ்மிதா, நிலோபர் காக்கா முட்டை புகழ் ரமேஷ் மற்றும் விக்கி , வேல்முருகன் உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடித்திருக்கின்றனர்.

உதவி இயக்குனரான நாயகன் தியான் பிரபு, ஒரு கதையை எடுத்துக் கொண்டு தயாரிப்பாளரிடம் செல்கிறார் தியான் பிரபு. அந்த தயாரிப்பாளர் அவரின் கதையை எடுத்து ஒரு பிரம்மாண்ட இயக்குனரிடம் கொடுத்து பிரம்மாண்ட செலவில் படத்தை இயக்க திட்டமிடுகிறார்.

இதனால் மனமுடைந்த தியான் பிரபு, தனது கதையை திருடிவிட்டனர் என்று கூறி வழக்குமன்றம் செல்கிறார். வழக்கை வாபஸ் பெறக் கூறி தயாரிப்பாளர் மிரட்டுகிறார். இவரின் மிரட்டலுக்கு தியான் பிரபு அடிபணிந்தாரா இல்லையா.? அதன்பிறகு தியான் பிரபுவிற்கு என்ன நடந்தது என்பதை திகில் கலந்த பதட்டத்தோடு மீதிக் கதையை கொடுத்திருக்கிறார் இயக்குனர்.

நாயகன் தியான் பிரபு, துணை இயக்குனர் கதாபாத்திரத்தில் அக்கதாபாத்திரமாகவே மாறி ஒன்றியிருக்கிறார். ஒரு துணை இயக்குனரின் வலியும் வேதனையும் எந்த அளவிற்கு இருக்கும் என்பதை கண்முன்னே கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறார். ஆக்‌ஷனிலும் அதிரடி காட்டியிருக்கிறார். அதிலும் க்ளைமாக்ஸ் காட்சியில் வில்லனை பழிவாங்கும் காட்சி திரையரங்கை அதிர வைத்திருக்கிறார் இயக்குனர் தியான் பிரபு.

படத்தில் நாயகிகளாக அஷ்மிதா, நிலோபர் இருவரும் படத்தின் கதாபாத்திரமாக மாறி நடித்திருக்கிறார்கள். பேயை பார்த்து பயந்து நடங்கும் காட்சிகளில் மிரள வைக்கிறார்கள்.

காக்காமுட்டை விக்கி, ரமேஷ் ஆகிய இருவரும் நாயகனின் நண்பர்களாக வருகிறார்கள். வில்லன்களாக வளவன், பாடகர் வேல்முருகன் ஆகியோர் நடித்திருக்கிறார்கள். திரைப்படத்தயாரிப்பாளராக மனோபாலா நடித்திருக்கிறார். இவரக்ள் அனைவரும் தங்களுக்கான கதாபாத்திரத்தை நேர்த்தியாக செய்து முடித்திருக்கிறார்கள்.

வேல் முருகனின் ஒளிப்பதிவில் இரவு நேர காட்சிகள் நம்மை பயமுறுத்தும் அளவிற்கு மிரட்டலாக இருக்கிறது. பாலமுரளியின் பின்னணி இசை படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது.

தமிழ் சினிமாவில் இப்படியான கதையை தேர்ந்தெடுத்து இயக்கியதற்காக இயக்குனர் தியான் பிரபுவிற்கு வாழ்த்துகள். பல முன்னணி இயக்குனர்கள் செய்ததை தோலுரித்து காட்டியிருக்கிறது இப்படம்.

அப்படியாக நடைபெற்ற பஞ்சாயத்துகளையும் இயக்குனர் படம் முடியும் இடத்தில் பதிவு செய்திருக்கிறார்.

படைப்பாளன் – பாராட்டுக்குறியவன்..

Related post