கார்த்தி இல்லாத “பையா 2”.. அதிர்ச்சியில் ரசிகர்கள்

நடிகர் கார்த்தியின் சினிமா கேரியரில் மிகவும் முக்கியமான திரைப்படமாக அமைந்த படம் தான் பையா.
இந்த படத்தை இயக்குனர் லிங்குசாமி இயக்கியிருந்தார். மிகப்பெரும் வெற்றி பெற்றது இந்த படம்.
தொடர்ந்து அடுத்தடுத்த படங்களை இயக்கி வந்த இயக்குனர் லிங்குசாமி, தற்போது ‘பையா 2’வை எடுக்க முடிவெடுத்துள்ளாராம்.
அதற்கான ஆரம்பகட்ட பணிகளை துவக்கியிருக்கிறார் லிங்குசாமி. ஆனால், இப்படத்தில் கார்த்தி நடிக்கவில்லையாம், இவருக்கு பதிலாக ஆர்யா நடிக்கவிருக்கிறாராம்.
ஆர்யாவிற்கு ஜோடியாக பிரபல பாலிவுட் நடிகையான ஜான்வி கபூர் நடிக்கவிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
விரைவில் இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.