பல்லு படாம பாத்துக்க விமர்சனம்

 பல்லு படாம பாத்துக்க விமர்சனம்

இயக்குனர் விஜய் வரதராஜ் இயக்கத்தில் அட்டகத்தி தினேஷ், சஞ்சிதா, ஷாரா, மொட்டை ராஜேந்திரன், ஜெகன், லிங்கா, சாய் தீனா, ஹரீஷ் பாரேடி, உள்ளிட்ட நட்சத்திரங்களின் நடிப்பில் உருவாகி வெளியாகியிருக்கும் படம் “பல்லு படாம் பாத்துக்க”.

எதை பேசுகிறது இப்படம்?

தெரிஞ்சா சொல்லமாட்டானா? நான் என்ன கதையை வெச்சிகிட்டா வஞ்சகம் பண்றேன்? அப்படினு வடிவேலு வசனத்தை போல இயக்குனருக்கும் என்ன சொல்றதுன்னு தெரியல. நமக்கும் புரியல. ஒரு அடல்ட் காமெடி படம். அவ்வளவு தான்.

கதைப்படி,

குஞ்சுதண்ணிகாடு என்ற மலையில், சிலர் தற்கொலை செய்து கொள்ள வருகின்றனர். (இடையில் 5 நபர்களின் பிளேஸ் பேக் அரை மணி நேரம்). அப்போது, அங்கு இருக்கும் அட்டகத்தி தினேஷ் அனைவரும் ஒன்றாக சேர்ந்து மது அருந்தலாம் என அழைக்கிறார். மதுவை அருந்திவிட்டு, அந்த காட்டுக்குள் செல்லும் அவர்கள், ஜாம்பிகளிடம் சிக்கிக் கொள்கிறார்கள்.

அப்போது, சஞ்சிதா அவர்களை காப்பாற்றுகிறார். ஆனால், மீண்டும் அந்த ஜாம்பிகள் அவரை கடிக்க வர தினேஷ் மற்றும் அவர்களின் கூட்டாளிகள் தப்பித்தார்களா? சஞ்சிதா எப்படி அந்த காட்டுக்குள் வந்தார்? எதனால் மனிதர்கள் ஜாம்பியாக மாறினார்கள்? என்பது படத்தின் இரண்டாம் பாதி.…

பூமர் அங்கிள் மற்றும் 90ஸ் கிட்ஸ் இருவரையும் கலந்த கலவை தான் தினேஷ். அப்படி தான் இருக்கிறது அவர் பேசும் வசனம். குக்கூ படத்தில் நடித்து அசத்திய தினேஷா இது? என்றளவுக்கு ஆச்சர்ய பட வைக்கிறார் தினேஷ். காரணம், நடிப்பில் செய்த சொதப்பல்.

ஒரு பனியன் மற்றும் பேண்டுடன் ஆக்ஷனில் அதகளம் செய்துள்ளார் சஞ்சிதா.

படத்தில் பலர் நடித்திருந்தாலும், ஜெகன் எப்படி இந்த கதாபாத்திரத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்தார் என்று தெரியவில்லை.

கதை இல்லை, திரைக்கதை இல்லை, அடல்ட் காமெடி இல்லை, ரோமன்ஸ் இல்லை ஒரு A படத்திற்கு என்ன தேவையோ அது எதையும் இல்லாமல் பார்த்து பக்குவமாக இயக்கியுள்ளர் இயக்குனர் விஜய் வரதராஜ்.

7 ஆண்டுகளிக்கு முன் எடுக்கபட்ட கதை. 3 வருடங்களுக்கு முன் ரிலீஸ் ஆகவேண்டிய படம் கிட்டத்தட்ட காலாவதியான ஒரு படத்தை இப்போது வெளியிடுகிறார்கள்.

பல்லு படாம பாத்துக்க – இந்த படத்துக்கு செலவு பண்ணாம பாத்துக்க.

Spread the love

Related post

You cannot copy content of this page