Panni Kutty Movie Review – Fulloncinema

 Panni Kutty Movie Review – Fulloncinema

கிருமி படத்தை இயக்கிய இயக்குனர் அனுசரன் இயக்கத்தில் கருணாகரன் மற்றும் யோகி பாபு இணைந்து நடித்திருக்கும் படம். படத்தின் கதை, கருணாகரன் வாழ்கையில் நல்ல விஷயங்கள் எதுவும் நடக்காமல் கெட்ட காரியங்கள் மட்டுமே நடக்கிறது, இதனால் சாக போகும் அவரை ராமர் காப்பாற்றி அவரின் கதையை கேட்கிறார். பிறகு இருவரும் சேர்ந்து சாமியார் லியோனி போய் பார்க்கிறார்கள். அவரை பார்த்ததும் கருணாகரனின் பிரச்சினைகள் ஒவ்வொன்றாக தீருகிறது,இதனால் சந்தோசத்தில் வேகமாக வண்டியை ஓட்ட ஒரு பண்ணி குட்டி மீது மோதி விடுகிறார்கள். மோதிய பன்னி குட்டியினால் அவர்கள் வாழ்க்கை எப்படி மாறியது? யோகி பாபு வின் பன்னி குட்டி எப்படி தப்பித்தது ? போன்ற கேள்விகளுக்கு நகைச்சுவை கலந்து விடை சொல்கிறது திரைப்படம்.

கருணாகரன் உத்ராவதி என்ற கதாபாத்திரத்தில் கச்சிதமாக பொருந்தி போகிறார். அளவான நடிப்பில் அனைவரையும் கவர்கிரார். யோகி பாபு தன் பங்கிற்கு படத்தை தாங்கி பிடிக்கிறார். ராமர் மற்றும் தங்கதுரை காமெடி சில இடங்களில் சிரிக்க வைக்கிறது சில இடங்களில் முறைக்க வைக்கிறது. படத்தின் நாயகி லக்ஷ்மி பிரியா புது வரவு என்றாலும் அழகாக இருக்கிறார். படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் சாமியார் வேடத்தில் லியோனி நடித்திருக்கிறார், நீண்ட இடைவேளைக்கு பிறகு தன் நடிப்பால் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து இழுகிரார். படத்தின் ஒளிப்பதிவு மற்றும் பாடல்கள் ஓகே. படத்தின் இயக்குநர் பட தொகுப்பையும் சேர்த்து வெட்டியுள்ளார். படத்தின் இயக்குநர் அனுசரண் இயக்கிய முதல் படம் கிருமி முற்றிலும் வித்தியாசமாக இருக்கும், அதிலிருந்து முற்றிலும் மாறுபட்டு இந்த படத்தை எடுத்துள்ளார்.படம் முழுக்க ரசிகர்களை சிரிக்க வைத்திருந்தால் பன்னி குட்டி இன்னும் நன்றாக இருந்திருக்கும்.

Panni Kutty : மகிழ்ச்சியான உணர்வை தரும்.

Related post