பார்த்திபனின் ”இரவின் நிழல்” இசை வெளியீட்டு விழா; அபிஷேக் பச்சன் & ஏ ஆர் ரகுமான் கலந்து கொண்டனர்!

 பார்த்திபனின் ”இரவின் நிழல்” இசை வெளியீட்டு விழா; அபிஷேக் பச்சன் & ஏ ஆர் ரகுமான் கலந்து கொண்டனர்!
Digiqole ad

பார்த்திபன் இயக்கி நடித்து விரைவில் வெளியாக இருக்கும் திரைப்படம் தான் “இரவின் நிழல்1”. ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்ட இப்படம் உலக சாதனை படைத்துள்ளது.

இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் உள்ள ஐஐடி வளாகத்தில் நடைபெற்றது.

இசைப்புயல் ஏ ஆர் ரகுமான் இப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார். இந்த விழாவிற்கு பாலிவுட் சூப்பர் ஸ்டார் அபிஷேக் பச்சன் கலந்து கொண்டார்.

மேலும், இப்படத்தினை கலைப்புலி எஸ் தாணு உலகம் முழுவதும் வெளியிடுகிறார்.

இவ்விழாவில், கரு பழனியப்பன், ஜி வி பிரகாஷ்குமார், கே எஸ் ரவிக்குமார், ராதிகா சரத்குமார், சரத்குமார், இயக்குனர் விஜய், தயாரிப்பாளர் தேனப்பன், தனஞ்செயன், இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ், விஜய்யின் தாயார் ஷோபனா உள்ளிட்ட நட்சத்திரங்களும் கலந்து கொண்டனர்.

விழாவில், ட்ரம்ஸ் சிவமணியின் இசை நிகழ்ச்சியும், ஏ ஆர் ரகுமானின் இசை நிகழ்ச்சியும் அரங்கேறியது. நிகழ்ச்சியில் அனைவரும் கருப்பு நிற உடை அணிந்து வந்திருந்தனர்.

 

Digiqole ad
Spread the love

Related post