6 நாட்களில் இத்தனை கோடியா.? வசூல் வேட்டை நடத்தும் பதான்!

 6 நாட்களில் இத்தனை கோடியா.? வசூல் வேட்டை நடத்தும் பதான்!

ஷாருக்கான், தீபிகா படுகோன் மற்றும் ஜான் ஆபிரகாம் நடிப்பில் உருவாகி ஜனவரி 25 ஆம் தேதி வெளியான திரைப்படம் தான் பதான்.

ஒரு பெரும் கட்சியின் எதிர்ப்பையும் தாண்டி வெளியாகி மிகப்பெரும் வசூல் வேட்டை நடத்தி வருகிறது பதான். படத்தின் விமர்சனங்களும் படத்திற்கு மிகப்பெரும் பலமாக இருப்பதால் அரங்குகள் நிறைந்த காட்சிகளாக திரையரங்குகளில் இப்படம் ஓடிக் கொண்டிருக்கிறது.

இந்த நிலையில், உலகம் முழுவதும் முதல் 6 நாள்கள்(திங்கள்கிழமை வரை) முடிவில் பதான் திரைப்படம் ரூ. 591 கோடி வசூலித்திருப்பதாக தயாரிப்பு நிறுவனமான யாஷ்ராஜ் பிலிம்ஸ் அறிவித்திருக்கிறது. இந்தியாவில் ரூ. 367 கோடியும், வெளிநாடுகளில் ரூ. 224 கோடியும் வசூல் செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்னமும் பல திரையரங்குகள் அரங்குகள் நிறைந்த காட்சிகளாக ஓடிக் கொண்டிருப்பதால், வசூல் வேட்டை இன்னும் அதிகமாக இருக்கும் என்கிறார்கள்.

 

Related post