பாலிவுட்டை தூக்கி நிறுத்திய பதான்.. கோடிகளை அள்ளும் வசூல்

 பாலிவுட்டை தூக்கி நிறுத்திய பதான்.. கோடிகளை அள்ளும் வசூல்

சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் ஷாருக்கான், தீபிகா படுகோன், ஜான் ஆபிரகாம் நடிப்பில் உருவான திரைப்படம் தான் பதான்.

இந்த படம் கடந்த 25-ஆம் தேதி உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியானது. இந்தி, தமிழ், தெலுங்கு என மூன்று மொழிகளில் வெளியாகியுள்ள இந்த படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

வசூலிலும் சக்கை போடு போட்டது பதான். இந்நிலையில், நேற்று முன்தினம் வரை சுமார் 780 கோடிக்கும் மேல் வசூலை வாரிக் குவித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த சில வருடங்களாக பாலிவுட்டில் வெளியான படங்கள் எதுவும் சரியாக வெற்றி பெறாமல் திணறி வந்த நிலையில், பாலிவுட்டை மீண்டும் தூக்கி நிறுத்தும் படமாக வெளிவந்து வெற்றி பெற்றிருக்கிறது பதான்.

இதனால், பாலிவுட் ரசிகர்கள் உற்சாகத்தில் இருக்கின்றனர்.

 

Related post