பிரமாண்டமாக நடைபெறவிருக்கும் “பத்து தல” இசை வெளியீட்டு விழா

 பிரமாண்டமாக நடைபெறவிருக்கும் “பத்து தல” இசை வெளியீட்டு விழா

இயக்குனர் கிருஷ்ணா இயக்கத்தில் சிம்பு நடித்திருக்கும் பத்து தல படத்தின் டீசர் நேற்றைய தினம் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.

இந்நிலையில், படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் வரும் 18 ஆம் தேதி மிகவும் பிரமாண்டமாக நடைபெறவிருக்கிறது.

இதற்கான ஆரம்பகட்ட பணிகளை துவக்கியிருக்கிறது படக்குழு. அதுமட்டுமல்லாமல், இந்த விழாவில் ஏ ஆர் ரகுமான் இசை நிகழ்ச்சியும் நடத்தவிருக்கிறார்.

விரைவில் அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

Related post