சிம்பு ரசிகர்களுக்கான சூப்பர் நியூஸ்.. பத்து தல அப்டேட்!!

 சிம்பு ரசிகர்களுக்கான சூப்பர் நியூஸ்.. பத்து தல அப்டேட்!!

கிருஷ்ணா இயக்கத்தில் சிம்பு, கெளதம் கார்த்திக், ப்ரியா பவானி சங்கர் நடிக்க உருவாகி வரும் திரைப்படம் தான் “பத்து தல”.

ஸ்டூடியோ கிரீன் சார்பில் கே ஈ ஞானவேல் ராஜா இப்படத்தை தயாரித்து வருகிறார்.

படம் ஷுட்டிங்க் ஆரம்பித்து சில வருடங்கள் ஆகியும் படப்பிடிப்பு நடத்தி முடிக்கப்படவில்லை. பல சோதனைகளைக் கடந்து மீண்டும் படப்பிடிப்பிற்கு தயாராகி வருகிறது படக்குழு.

இதன்படி, ஜூலை 25 ஆம் தேதி முதல் நடிகர் சிம்பு இதன் படப்பிடிப்பில் கலந்து கொள்ளாவிருக்கிறார்.

மலைப் பிரதேசத்தில் நடைபெறும் படப்பிடிப்பில் ஆக்‌ஷன் காட்சிகள் படமாக்கப்படவிருக்கிறதாம்.

10 நாட்கள் திருச்செந்தூரிலும், 10 நாட்கள் சென்னையிலும் படமாக்க படகுழுவினர் திட்டமிட்டுள்ளனர்.

இப்படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைத்து வருகிறார்.

 

Related post