பத்துதல படத்தின் மொத்த வசூல் விவரம்;

 பத்துதல படத்தின் மொத்த வசூல் விவரம்;

சிலம்பரசன்.டி.ஆர், கௌதம் கார்த்திக், ப்ரியா பவானி ஷங்கர், கௌதம் வாசுதேவ் மேனன் நடிப்பில், ஒபிலி.என்.கிருஷ்ணன் இயக்கத்தில் உருவாகி வெளியான திரைப்படம் “பத்துதல”. இப்படத்தை ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் சார்பில் கே.ஈ.ஞானவேல் ராஜா தயாரித்திருந்தார்.

சிவராஜ் குமார் நடிப்பில் வெளியான கன்னட படம் “மப்டி” இப்படத்தின் ரீமேக் தான் “பத்துதல”. கடந்த மார்ச் மாதம் 30ம் தேதி மிகுந்த எதிர்பார்ப்போடு வெளியான இப்படம் சுமாரான விமர்சனத்தையே பெற்றது. காரணம், இரண்டாம் பாதியில் மட்டுமே வருகிறார் சிம்பு. அது கூட பெரிய குறை இல்லை என்றாலும், முதலமைச்சரை கொலை செய்து, அந்த பதவிக்கு வேறு ஒருவரை நியமனம் செய்யும் அளவிளான ஒரு “டான்” கதாபாத்திரத்திற்கு அவர் பொருந்தவில்லை என்பது தான் முக்கிய காரணம்.

மேலும், 30 கோடி ரூபாய் செலவில் உருவான இப்படத்தின் மொத்த வசூல் இது தான்,

தமிழ் நாடு – 30.80 கோடி
கர்நாடகா – 2.20 கோடி
மற்ற மாநிலங்கள் – 1.55 கோடி
வெளிநாடு – 8.60 கோடி

திரையரங்க வசூல் – 43.15 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது.

மேலும், அமேசான் ஓடிடி தளத்தில் வெளியான இப்படம் ரூபாய் 5 கோடிக்கு விற்பனையானதாகவும் சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Related post