தெறி ரீமேக்கில் பவன் கல்யாண்… அதிர்ச்சியில் உறைந்த பவன் ரசிகர்கள்!!

 தெறி ரீமேக்கில் பவன் கல்யாண்… அதிர்ச்சியில் உறைந்த பவன் ரசிகர்கள்!!

அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்த தெறி படம் வசூல் ரீதியாக பெரிய வெற்றி பெற்றது. அந்த படத்தை தெலுங்கிலும் டப் செய்து ரிலீஸ் செய்தார்கள். மா டிவி சேனலிலும் பல முறை ஒளிபரப்பி இருக்கிறார்கள். அதனால் தெலுங்கு ரசிகர்கள் எல்லோருக்கும் தெரிந்த கதை தான் தெறி.

ஆனா தற்போது நடிகர் பவன் கல்யாண் நடிப்பில் தெறி படத்தை தெலுங்கில் ரீமேக் செய்கிறார்கள் என தகவல் வெளியாகி இருக்குது. ஹரிஷ் ஷங்கர் அந்த படத்தை இயக்கவிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இப்படி புது கதையில் நடிக்காமல் பவன் கல்யாண் ரீமேக் படத்தில் நடிப்பது ரசிகர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது. அதனால் தெறி ரீமேக் பண்ணாதீங்க என ரசிகர்கள் ட்விட்டரில் ட்ரெண்ட் செஞ்சு வாராய்ங்க. அதிலும் ஒரு ரசிகர் தெறி ரீமேக் செய்தால் தற்கொலை செய்து கொள்வேன் என கடிதம் எழுதி இருக்கிறார்.

அது தெறி ரீமேக் படம் தான் என படக்குழு அதிகாரபூர்வமாக தெரிவிக்கலை என்றாலும், ரசிகர்கள் தற்போது செய்து வரும் விஷயம் டோலிவுட் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது…

 

Related post