Payanigal Gavanikkavum – திரைப்படம் விமர்சனம்

 Payanigal Gavanikkavum – திரைப்படம் விமர்சனம்
Digiqole ad

பயணிகள் கவனிக்கவும் : 2019 ம் ஆண்டு மலயாளத்தில் வெளியாகி வெற்றி பெற்ற விக்ருதி என்ற படத்தின் மரு உருவாக்கம் இந்த பயணிகள் கவனிக்கவும் ஆஹா ott தளத்தில் வெளியாகிறது.விதார்த் மற்றும் லட்சுமி,கருணாகரன் மற்றும் பலர் நடித்துள்ளனர்.படத்தின் கதை விதார்த் மற்றும் லட்சுமி காது கேளாத வாய் பேச முடியாத தம்பதிகள் இவர்களுக்கு இரண்டு பிள்ளைகள்.கருணாகரன் துபாய் இருந்து சென்னை வருகிறார்.இவர் சதா ஃபோனில் புகைப்படம் எடுத்து அதை likes காக சமூக வலைதளங்களில் பதிவேற்றும் பழக்கம் உள்ளவர்.ஒரு நாள் விதார்த் ரயிலில் அசந்து உறங்கும் போது அதை கருணாகரன் புகைப்படம் எடுத்து குடி போதையில் உறங்குகிரார் என்று பதிவேற்றம் செய்கிறார். அந்த புகைப்படம் வைரல் ஆக விதார்த் வாழ்கையில் ஏற்படும் திருப்பங்கள் தான் கதை மீதி கதை

 

விதார்த் காது கேளாத வாய் பேச முடியாத கதாபாத்திரத்தில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்,அவரின் உணர்ச்சிகளை சைகைகள் மூலம் தெரிவிக்கும் இடங்களில் கைத்தட்டல் வாங்குகிறார்.இது போன்ற நல்ல கதாபாத்திரங்களில் தொடர்ந்து நடித்தால் சிறந்த நடிகராக வருவார். லட்சுமி பிரியா அவரும் விதார்த் உடன் ஈடு கொடுத்து நடித்து உள்ளார்.கருணாகரன் தன்னுடைய வழக்கமான நடிப்பில் இருந்து சற்று மாறுபட்ட நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். சத்யன் மற்றும் கருணாகரன் காமெடி அங்கங்கே ரசிக்க வைக்கிறது.படத்தின் இசை மற்றும் ஒளிப்பதிவு படத்தின் தரத்தை உயர்த்தி தாங்கி நிற்கிரது.சமூக வலைத்தளங்களில் சந்தாதாரர்களை கவர்ந்திழுக்க அலைப்பேசி உபயோகிப்பவர்கள் செய்யும் சிறு தவறுகள் எப்படி பிறருக்கு அவப்பெயரை உண்டாக்குகிறது என்பதை நகைச்சுவை, குடும்ப உணர்வுகளை மையமாக வைத்து வாழைநாரில் பூத்தொடுத்ததுப்போல் அழகாக சொல்லியிருக்கிறார் இயக்குநர் சக்திவேல்.பயணிகள் கவனிக்கவும் ஆஹா ott தளத்தில் இந்த வாரம் வெளியாகி உள்ளது.தவறாமல் சந்தா கட்டணம் செலுத்தி கண்டுகளிக்க கூடிய நல்ல திரைப்படம்.

பயணிகள் கவனிக்கவும்: அருமை

Digiqole ad
Spread the love

Related post