பேச்சி விமர்சனம் – (3.35/5);
பால சரவணன், காயத்ரி, தேவ், ப்ரீத்தி நெடுமாறன், ஜனா நடிப்பில், ராமசந்திரன் இயக்கத்தில், வெயிலோன் என்டேர்டைன்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ள படம் “பேச்சி”.
கதைப்படி,
காயத்ரி மற்றும் அவரின் நண்பர்கள் என ஐந்து பேர் கொல்லிமலையில் உள்ள கிராமத்திற்கு ட்ரெக்கிங் வருகிறார்கள். அங்கு வன ஊழியராக இருக்கும் பால சரவணன் இவர்களுக்கு வழிகாட்டியாக செல்கிறார்.
ட்ரெக்கிங் ஆரம்பம் ஆனது முதல் பால சரவணனின் பேச்சை கேட்க மறுக்கிறார் காயத்ரி மற்றும் அவரின் நண்பர்கள். அப்போது அந்த காட்டின் ஒரு குறிப்பிட்ட பகுதி தடை செய்யப்பட்ட இடமாக இருக்கிறது.
அங்கு போகக்கூடாது என எச்சரிக்கும் பால சரவணனை மீறி நண்பர்கள் அங்கு செல்கிறார்கள். அப்போது அங்கு இருக்கும் பேச்சி என்ன செய்தால்? பேச்சியிடம் இவர்கள் சிக்கினார்களா? பேச்சி யார்? பேச்சியின் பின் கதை என்ன? பால சரவணன் அனைவரையும் காப்பாற்றினாரா? போன்ற பல கேள்விகளுக்கு திகிலாக விடை தருகிறது படத்தின் இரண்டாம் பாதி.
வழக்கமாக பேய் படங்கள் என்றாலே, ஒரு வீட்டிற்குள், இருட்டில் வரும் பேய், குறிப்பிட்ட நேரத்தில் வரும் பேய், பழி வாங்க வரும் பேய் அதற்கு உதவும் கதை நாயகன் என வழக்கமான பேய் படங்கள் போன்று இல்லாமல் புதிய கோணத்திலும், புதிய கதைக்களத்துடனும் அட்டகாசமான திரைக்கதை அமைத்து, நம்மை திகிலடைய செய்து விட்டார் இயக்குனர் ராமசந்திரன்.
வழக்கமான பேய் படத்தின் எலிமெண்ட்டுகளையும், ரூல்ஸையும் மீறி வித்யாசத்தை காட்டி தனித்துவத்தை நிலைநாட்டியுள்ளார் இயக்குனர். குறை சொல்ல ஒரு காட்சியை தவிர வேறு எதுவும் இல்லை.
பலா சரவணன் படத்திற்கு பெரும் பங்கு கொண்டு கதையை தன் மீது சுமந்துள்ளார். அவரின் நேர்த்தியான நடிப்பு, முகத்தில் தெரியும் பதட்டம் என அவரின் பாத்திரத்தை உணர செய்துள்ளார் பால சரவணன்.
காயத்ரியின் நடிப்பு இப்படத்தில் சுமார் தான். பாத்திர வலு அறிந்து நடிக்க வில்லையோ என்ற கேள்வி மட்டும் தான்.
உடன் நடித்த நண்பர்கள் அனைவரும் கச்சிதமான உடல் மொழியையும் நடிப்பையும் வெளிப்படுத்தியது படத்திற்கு கூடுதல் பலம்.
காட்டுக்குள் அமைக்கப்பட்ட செட், மலையின் அழகு என மிக அழகாக ஒளிப்பதிவு செய்துள்ளர் ஒளிப்பதிவாளர் பார்த்திபன்.
திகில் படத்திற்கு தேவையான மிக முக்கிய ஒரு கருவி தான் இசை. அந்த விதத்தில் நம்மை திகிலடைய செய்துள்ளார் இசை இசையமைப்பாளர் ராஜேஷ் முருகேசன்.
கிளாமர் பேய், பழி வாங்க துடிக்கும் பேய் என வழக்கமான படங்களை பார்த்து போர் அடித்தவர்களும் சரி, புதிய அனுபவத்தை விரும்புவர்களுக்கும் சரி “பேச்சி” படத்தை நிச்சயம் பார்க்க வேணுடும்.
பேச்சி – திகில் சம்பவம்